நடப்பு உலகில் இவர் தான் சிறந்த லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டர் – மோர்கன் புகழாரம்

0
449
Eoin Morgan

நெதர்லாந்து நாட்டிற்குச் சமீபத்தில் வெஸ்ட் இன்டீஸ் அணி மூன்று போட்டிகள் ஒருநாள் தொடரில் விளையாட சுற்றுப்பயணம் செய்து விளையாடி இருந்தது. தற்போது உள்நாட்டில் நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தின் ஒரு அணி விளையாட, மற்றொரு அணி நெதர்லாந்திற்கு மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட சென்றுள்ளது.

நேற்று இந்தத் தொடரின் முதல் போட்டி ஆம்ஸ்டல்வீன் நகரில் துவங்கியது. டாஸில் வென்ற நெதர்லாந்து அணி கேப்டன் பீட்டர் சீலர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அவர் வாழ்க்கையில் எடுத்த சில தவறான முடிவுகளில், இந்தப் போட்டியில் பந்துவீசுவதென தீர்மானித்த இந்த முடிவுதான் மோசமானதாக அமையப்போகிறதென அவருக்கு அப்போது தெரியவில்லை!

- Advertisement -

முதலில் இங்கிலாந்து பேட்டிங்கை துவங்க வந்த ஜேசன் ராய் ஒரு ரன்னில் வெளியேற, அடுத்து பில் சால்ட் உடன் டேவிட் மாலன் ஜோடி சேர முதல் சரவெடி ஆரம்பித்தது. இருவரும் சேர்ந்து இரண்டாம் விக்கெட்டுக்கு 222 ரன்கள் குவித்தார்கள். பில் சால்ட் தனது முதல் சர்வதேச சதத்தை 93 பந்துகளில் 122 ரன்களை அடித்து வெளியேறினார்.

இதற்குப் பிறகு டேவிட் மலானுடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர இரண்டாவது அதிரடி சரவெடி ஆரம்பித்தது. ஒருபுறம் டேவிட் மலான் நிற்க, ஜோஸ் பட்லர் உள்ளே வந்ததில் இருந்து, சிக்ஸர், பவுண்டரிகளால் விளாசிக்கட்ட ஆரம்பித்தார். இறுதி வரை களத்தில் நின்ற அவர் 7 பவுண்டரிகள், 14 சிக்ஸர்களோடு 70 பந்துகளில் 162 ரன்களை குவித்தார். நடுவில் டேவிட் மலான் 109 பந்துகளில் 125 ரன்களை அடித்து வெளியேறி இருந்தார். 50 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 498 ரன்களை குவித்து, ஒருநாள் போட்டியில் அதிக ரன்களை குவித்த அணி என்று உலகச் சாதனையைப் படைத்தது. அடுத்து விளையாடிய நெதர்லாந்து அணி 266 மட்டுமே எடுத்து, 232 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.

- Advertisement -

ஆட்டம் முடிந்து அதிரடி சதம் விளாசிய ஜோஸ் பட்லர் பற்றிப் பேசிய இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் “தற்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்தான்” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -