ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த சூப்பர் கிங்ஸ்.. வாழ்வா சாவா ஆட்டத்தில் வெற்றி.. மும்பையை முந்தி இரண்டாம் இடம்!

0
6219
TSK

அமெரிக்காவில் தற்பொழுது முதல் முறையாக மேஜர் லீக் கிரிக்கெட் என்ற பெயரில் டி20 கிரிக்கெட் லீக் தொடர் நடைபெற்று வருகிறது!

இந்தத் தொடரில் மொத்தம் ஆறு அணிகள் விளையாடுகின்றன. இதில் நான்கு அணிகளை ஐபிஎல் தொடரில் அணிகளை வாங்கி உள்ள சென்னை, மும்பை, கொல்கத்தா, மற்றும் டெல்லி ஆகிய அணி நிர்வாகங்கள் வாங்கி இருக்கின்றன. மீதி இரண்டு அணிகளை அமெரிக்க நிறுவனங்கள் வாங்கியிருக்கின்றன.

- Advertisement -

மொத்தம் இடம்பெற்றுள்ள ஆறு அணிகளும் மற்ற அணிகளுடன் ஒவ்வொரு போட்டியில் விளையாடும். லீக் சுற்றில் ஒவ்வொரு அணிக்கும் ஐந்து போட்டிகள் கிடைக்கும். ஐந்து போட்டிகள் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். பிளே ஆப் சுற்று ஐபிஎல் தொடர் பிளே ஆப் போலவே இருக்கும்.

இந்த நிலையில் நான்கு ஆட்டங்களில் மூன்று வெற்றிகள் உடன் சீட்டில் ஆர்கஸ் மற்றும் ஐந்து ஆட்டங்களில் மூன்று வெற்றிகள் உடன் வாஷிங்டன் ஃப்ரீடம் இந்த இரண்டு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தன. அதே சமயத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று நான்கு போட்டியில் தோற்று பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி இருந்தது.

இந்த நிலையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் ஆகிய மூன்று அணிகள் ப்ளே ஆப் சுற்றில் மீதி இருக்கும் இரண்டு இடங்களுக்கு போட்டியில் இருந்தன. இந்த நிலையில் இன்று டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியும் சான்பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற சான்பிரான்சிஸ்கோ யூனிகான்ஸ் முதலில் பேட்டிங் செய்வதென முடிவு செய்தது.

- Advertisement -

அந்த அணிக்கு சர்வதேச வீரர்கள் பின் ஆலன் 4, ஸ்டாய்னிஸ் 13, சதாப் கான் 20, கோரி ஆண்டர்சன் 14 ரண்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தாலும், மற்றும் ஒரு சர்வதேச வீரர் மேத்யூ வேட் 30 பந்துகளில் நான்கு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் 49 ரன்கள் எடுத்தார். சைதன்யா பிஷ்னோய் இறுதிக்கட்டத்தில் 21 பந்துகளில் மூன்று பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 35 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் சான்பிரான்சிஸ்கோ யூனிகான் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது. டெக்ஸா சூப்பர் கிங்ஸ் தரப்பில் கோட்சி நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதற்கு அடுத்து வாழ்வா சாவா போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிலைமையில் களம் இறங்கிய டெக்சா சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பாப் டு பிளசிஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். ஆனாலும் மற்றும் ஒரு துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே சுதாரித்து பொறுமையாக 27 பந்தில் 30 ரன்கள் எடுத்துக் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கடுத்து டேவிட் மில்லர் 10, மிச்சல் சான்ட்னர் 7 என வெளியேற அணி நெருக்கடியில் சிக்கியது.

இப்படியான நெருக்கடி சூழ்நிலையில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடி வரும் மிலிந்த் குமார் மற்றும் ஆல் ரவுண்டர் டேனியல் சாங்ஸ் இருவரும் சேர்ந்து அபாரமாக விளையாடி டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வெல்ல வைத்து, புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்க வைத்து அசத்தினார்கள்.

மிலிந்த் குமார் 42 பந்தில் 52 ரன்களும், டேனியல் சாம்ஸ் 18 பந்தில் இரண்டு பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் உடன் 42 ரன்கள் எடுத்து அதிரடி காட்டியது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது.

அதே சமயத்தில் சீட்டில் ஆர்கஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாட இருக்கிறது. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வி அடைந்தால் கூட தோல்வி பெரிய அளவில் இல்லாவிட்டால் ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதே சமயத்தில் வெற்றி பெற்றால் ரன் ரேட்டில் பெரிய அளவில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் புள்ளி பட்டியலில் முதலிடத்தையே பிடிக்கும். அதே சமயத்தில் சீட்டில் ஆர்கஸ் மோசமாக தோற்றால் சென்னை அணியின் இரண்டாம் இடம் தப்பிக்கும்!