போதும் டேவிட் வார்னர் ஓய்வு பெறலாம்! – ரிக்கி பாண்டிங் பரபரப்பு பேச்சு!

0
203
Ponting

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட சிறப்பு வாய்ந்த வீரர் டேவிட் வார்னர். வெள்ளைப் பந்து கிரிக்கெட் மட்டுமே ஆஸ்திரேலியா உள்நாட்டு கிரிக்கெட்டுக்காக விளையாடி, அங்கிருந்து நேரடியாக ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்த ஒரே வீரர் டேவிட் வார்னர் மட்டும்தான். மிகவும் கண்டிப்பான பாரம்பரியம் உடைய ஆஸ்திரேலியா கிரிக்கெட் டேவிட் வார்னரின் திறமைக்காகவே தனது கட்டுப்பாட்டை தளர்த்திக் கொண்டது!

2008 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்த டேவிட் வார்னர் ஓராண்டு தடைக்காலம் முடிந்து திரும்பி வந்த பின்பு பழைய முறையில் இல்லை என்றாலும் தன்னால் முடிந்த அளவுக்கு திறமையை வெளிப்படுத்வே செய்தார்!

- Advertisement -

டேவிட் வார்னருக்கு இங்கிலாந்திலும் இந்தியாவிலும் சிவப்பு பந்தில் பெரிய அளவுக்கு வெற்றிகள் கிடையாது. தற்பொழுது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் தொடரில் காயம் ஏற்பட்டு நாடு திரும்பி இருக்கும் வார்னர் அடுத்து நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடருக்கு ஆஸ்திரேலியா அணிக்கு திரும்புவார்.

இவரது ஓய்வு குறித்து ஆஸ்திரேலியா அணியின் லெஜெண்ட் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் அவரை விளையாட விரும்புவார்கள் என்று நான் கருதுகிறேன். இங்கிலாந்தில் டேவிட் வார்னருக்கு அவர் பிற இடங்களில் செய்துள்ள சாதனையை போல் இல்லாத காரணத்தால், ஆஸ்திரேலியா அணி இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் விளையாட ஆசஷ் தொடருக்கு வருவதை ஒட்டி சிந்திப்பார்கள் ” என்று கூறி இருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” டேவிட் வார்னருக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிதான் இறுதிப்போட்டி என்று நான் கூறவில்லை. ஆனால் முதலில் அவருக்கு அந்த போட்டியில் இடம் அளித்து அதற்கு அடுத்து வரும் ஆசஸ் தொடருக்கு அவர் சரி வருவாரா இல்லையா என்று பார்ப்பார்கள் என்று சொல்கிறேன்” என்று கூறியுள்ளார்!

- Advertisement -

மேலும் டேவிட் வார்னர் ஓய்வு பற்றி பேசிய ரிக்கி பாண்டிங் ” அவர் இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்நாட்டில் மெல்போன் மைதானத்தில் தனது நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடினார். மேலும் அந்தப் போட்டியில் 200 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் ஓய்வு பெறுவதற்கு அந்தப் போட்டி மிகச் சிறந்ததாக இருந்தது. அவர் ஓய்வு பெறுவதற்கு சிறந்த நேரம் அதுவென்று நான் கருதினேன். உள்நாட்டில் சொந்த மக்களின் முன்னால் இப்படி ஒரு அற்புதமான நிலையில் ஓய்வு பெறுவது எல்லோருக்கும் அமையாது. ஆனால் மீண்டும் இந்த வாய்ப்பு வார்னருக்கு கிடைக்காது என்று நம்மால் யார் சொல்ல முடியும்? ஆனால் அதற்கு இன்னும் 12 மாதங்கள் இருக்கிறது. அவர் ஓய்வு முடிவை தென் ஆப்பிரிக்கா போட்டியின் போது அறிவித்திருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்!