நேற்று டி20 உலக கோப்பை தொடரில் நேபாள் அணி தங்களுக்கு எதிராக மிக சிறப்பாக விளையாடி உள்ளதாக இங்கிலாந்து அதிரடி ஆட்டக்காரர் வில் ஜேக்ஸ் கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்கள் எடுத்தது. இந்த நிலையில் யாரும் எதிர் பார்க்காத அளவுக்கு போராடிய நேபாள் அணி 180 ரன்கள் எடுத்து மிரட்டியது. கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்த நேபால் அணி நான்கு ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
நேபாள் கொடுத்த செய்தி
நேற்று போட்டி முடிவுக்கு பின் பேசிய நேபாள் அணியின் கேப்டன் தாங்கள் சும்மா விளையாடிவிட்டு போக வரவில்லை எனவும், தாங்கள் யாரையும் எளிதாக மதிப்பிடவில்லை அதேபோல் தங்களையும் யாரும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, இதுவே தாங்கள் உலகிற்கு சொல்லும் செய்தி என்று கூறியிருந்தார்.
மேலும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் மற்றும் ஜோஸ்பட்லர் இருவரும் நேபாள் அணி விளையாடிய விதத்திற்கு மிகவும் பாராட்டி பேசி இருந்தார்கள். இந்த நிலையில் நேற்றைய போட்டியில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்ட வில் ஜேக்ஸ் ஆட்டநாயகன் விருது வென்றார். அவரும் தன் பங்குக்கு நேபால் அணியை பாராட்டி இருக்கிறார்.
இதயம் துடித்து விட்டது
இது குறித்து வில் ஜேக்ஸ் கூறும்போது “நாம் முழு பாராட்டும் நேபாள் அணிக்கு கொடுக்க வேண்டும். அவர்கள் எங்களுக்கு எதிராக மிகவும் புத்திசாலித்தனமாக சிறப்பாக விளையாடியிருக்கிறார்கள். நாங்கள் விளையாடும் பொழுது இந்த ஆடுகளம் தந்திரமாக இருப்பதாக உணர்ந்தோம். ஆனால் அதைத் தாண்டி அவர்கள் இந்த ஆடுகளத்தில் மிகச் சிறப்பாக விளையாடி உள்ளார்கள். அவர்கள் மிக நெருக்கமாக வந்தார்கள்”
இதையும் படிங்க : என் கிரிக்கெட் வரலாற்றில் இதுபோல தோல்வியை நினைத்து ஒரு நாளும் பயந்ததில்லை – ஜாஸ் பட்லர் உருக்கம்
“எனக்கு அந்த நேரத்தில் இதயம் எக்கச்சக்கமாக துடிக்க ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது போட்டியை திரும்பி பார்க்கும் பொழுது அவர்களால் வெற்றி பெற்று இருக்க முடியும் என்று தெரிகிறது. அவர்கள் திட்டம் தீட்டி வந்த விதம் அற்புதமாக இருந்தது. அவர்கள் எங்களை விளிம்பிற்கு கொண்டு போய் தள்ளி விட்டார்கள். மேலும் ஆடுகளங்கள் இப்படித்தான் இருக்கப் போகின்றதா? என்றும் நாங்கள் பார்க்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்.






