எல்லாம் சென்னை டெஸ்ட்டில் ஆரம்பித்தது ; டி20க்கு அதிக முக்கியத்துவம் அளித்ததால் ஆஷஸ் டெஸ்ட்டில் சொதப்பல் – மைக்கேல் வாகன் குற்றச்சாட்டு

0
1343
Michael Vaughan and Joe Root

இங்கிலாந்து அணி தற்போது ஆஸ்திரேலியா சென்று வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் தற்போது ஆஸ்திரேலிய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகளை வென்று முன்னிலை வகிக்கிறது. இங்கிலாந்து அணி மிகவும் மோசமாக முதல் டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது. பிரிஸ்பன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் வழக்கம்போல் ஆஸ்திரேலிய அணியும் மிகவும் எளிதாக வெற்றி பெற்றது. அதன்பிறகு அடிலெய்ட் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இங்கிலாந்து அணியின் இந்த மோசமான ஆட்டம் குறித்து தற்போது அந்த அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கருத்து தெரிவித்துள்ளார். அதில் இங்கிலாந்து அணியின் இந்த மோசமான ஆட்டம் தற்போது அல்ல இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான சென்னை டெஸ்ட் போட்டியில் இருந்து தொடங்கி விட்டது என்று அவர் கூறியுள்ளார். சென்னை டெஸ்ட் போட்டியில் மிகவும் சிறப்பாக இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற பிறகும் அந்த அணி பட்லர் மற்றும் ஆர்ச்சர் ஆகியோருக்கு அடுத்த போட்டியில் ஓய்வு அளித்தது. வர இருந்த டி20 போட்டியில் பங்கேற்பதற்காகவே இப்படி செய்யப்பட்டது என்று கூறியுள்ளார் வாகன். மேலும் டிஸ்டிக் கிரிக்கெட்டை விட டி20 கிரிக்கெட் இருக்கும் முக்கியத்துவம் தருவதால் தான் இவ்வாறு இங்கிலாந்து அணி தொடர் தோல்விகளை சந்திக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

ஆஷஸ் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் சீனியர் பந்துவீச்சாளர் பிராடை அணியில் சேர்க்காதது முட்டாள்தனமான முடிவு என்றும் அவர் விமர்சித்துள்ளார். வார்னர் போன்ற வீரருக்கு நிச்சயம் முதலில் பிராடை பந்து வீச வைத்திருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கண்டிப்பாக ஒரு அதி வேகப் பந்து வீச்சாளரையும் ஒரு சுழற்பந்து வீச்சாளரையும் எடுத்திருக்க வேண்டும் என்று தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சொந்த நாட்டை சேர்ந்த மைக்கேல் வாகனே இங்கிலாந்து அணியை இவ்வளவு மோசமாக விமர்சித்து உள்ளதால் மூன்றாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் உத்வேகத்துடன் செயல்பட்டு அந்த அணி வெற்றி பெறும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.