6.7 அடி உயர வீரர் அறிமுகம்.. இங்கிலாந்து பிளேயிங் XI அறிவிப்பு.. இலங்கை அணிக்கு 3வது டெஸ்ட்டில் புது சவால்

0
417

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 6ம் தேதியில் லண்டனில் நடைபெற உள்ளது. மூன்றாவது போட்டியில் வெற்றி பெற இலங்கை அணி கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து 11 அணியை தற்போது கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் இங்கிலாந்து அணியில் மேத்யூ போட்ஸுக்கு பதிலாக 6அடி 7 அங்குலம் கொண்ட 20 வயது இளம் பேகப்பந்துவீச்சாளர் இங்கிலாந்து அணியில் இணைத்திருக்கிறார்.

- Advertisement -

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் ஏற்கனவே தோல்வி அடைத்து தொடரையும் இழந்துள்ளது. எனவே மூன்றாவது டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற்று ஆறுதல் வெற்றியோடு நாடு திரும்ப இலங்கை அணி முயற்சிக்கும். மேலும் இங்கிலாந்து அணியும் தொடரை முழுமையாக வெல்ல போராடும் என்று தெரிகிறது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் பிளேயிங் லெவன் அணியை அறிவித்திருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பெரும்பாலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர்களாகவே இருக்கின்றனர். ஆனால் ஒரு முக்கிய மாற்றமாக ஏற்கனவே காயம் அடைந்து டெஸ்ட் அணியில் இருந்து வெளியேறிய மார்க் வுட்டுக்கு பதிலாக 20 வயதான இளம் வீரர் ஜோஸ் ஹல் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

- Advertisement -

இருப்பினும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் மேத்யூ போட்ஸ் மார்க் வுட்டுக்கு பதிலாக விளையாட, தற்போது நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் அவருக்கு பதிலாக ஜோஸ் ஹல் இணைய உள்ளார். இடது கை வேகப்பத்து வீச்சாளர் ஆன இவர் 2023ஆம் ஆண்டு இங்கிலாந்து முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

அறிமுகமானதிலிருந்து இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 64.75 சராசரியோடு 16 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் இவருக்கு சிறப்பாக அமைய விட்டாலும் இவரது உயரம் பெரிய சாதகமாய் இருப்பதால் இந்திய அணிக்கு எதிர்கால நட்சத்திரம் ஆக இருப்பார் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க:ரோகித் பாய் கிட்ட இருந்து 2 முக்கியமான விஷயம் கத்துக்கிட்டேன்.. கம்பீர் இத சொல்லி இருக்காரு – ஜெய்ஸ்வால் பேச்சு

இலங்கை அணிக்கு எதிராக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்:

டான் லாரன்ஸ், பென் டக்கெட், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக் (துணை கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஆலி ஸ்டோன், ஜோஷ் ஹல் மற்றும் ஷோயப் பஷீர்.

- Advertisement -