1000 நாள் கழித்து வாய்ப்பு.. இங்கிலாந்து அறிவித்த எதிர்பாராத பிளேயிங் XI.. 2வது இலங்கை டெஸ்ட்

0
354

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற 29ஆம் தேதி லண்டனில் நடைபெற உள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் விலகி இருப்பது சற்று பின்னடைவை இங்கிலாந்து சந்தித்துள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரை கம்பீரமாக வெற்றி பெற்று இங்கிலாந்தில் டெஸ்ட் தொடர் விளையாட பயணம் மேற்கொண்டு இருக்கிறது. இதில் டெஸ்ட் தொடருக்கு தயாராக போதிய அவகாசம் கிடைக்கவில்லை என்றும், மேலும் சில பயிற்சி போட்டிகள் வேண்டும் என்று கூறிய தனஞ்செயா தலைமையிலான இலங்கை அணி முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதில் முதல் இன்னிங்ஸில் 236 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 326 ரன்களும் குவித்து தனது போராட்ட குணத்தை இலங்கை அணி வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் உள்நாட்டு கிரிக்கெட் தொடரான 100 லீக் தொடரில் காயமடைந்து வெளியேறியதை அடுத்து அவருக்கு பதிலாக ஒல்லி போப் தலைமையில் ஆன இங்கிலாந்து அணி விளையாடியது.

- Advertisement -

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 358 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 205 ரன்களும் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் ஜோ ரூட் ஹாரி ப்ரூக் மற்றும் ஜேமி ஸ்மித் ஆகியோர் சிறந்த பேட்டிங் ஃபார்மில் இருக்கின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் வென்ற கையோடு இரண்டாவது போட்டியையும் வெற்றி பெற இங்கிலாந்து அணி ஆர்வமாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக தற்போது வேகப்பந்துவீச்சாளர் ஒல்லி ஸ்டோன்ஸ் 2வது டெஸ்டில் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவர் கடைசியாக 2021ஆம் ஆண்டு நியூசிலாந்தில் எட்ஜ்பாஸ்டனில் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதற்குப் பிறகு தற்போது தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இதையும் படிங்க:ராகுல் டிராவிட் உடன் ஆடி.. இப்போ அவர் மகன் கூடவும் விளையாடும் 3 இந்திய வீரர்கள்.. தனித்துவ பெருமை

இலங்கை அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்டில் களமிறங்க உள்ள இங்கிலாந்து அணி : பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஒல்லி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக் (துணை கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், மேத்யூ பாட்ஸ், ஆலி ஸ்டோன், ஷோயப் பஷீர்

- Advertisement -