ஐபிஎல் 2025

1.5 பில்லியன் மக்களை எப்படி சமாளிக்கிறீங்க.. கோலியின் இந்த அறிவுரைதான் எனக்கு பெரிய மாற்றம் கொடுத்தது – ஜாஸ் பட்லர்

உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாஸ் பட்லர் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக களம் இறங்கி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடிய போது விராட் கோலி தனது பேட்டிங்கில் உதவிய விதம் குறித்து பட்லர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

ஒரே வருடம் அதிக ரன்கள்

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜாஸ்பர் 11 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இவர் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சில வருடங்களாக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு மிக உயர்ந்த பேட்டிங் பார்மில் இருந்த பட்லர் 17 போட்டிகளில் விளையாடி அந்த ஆண்டு 863 ரன்கள் குவித்தார். இது ஒரு ஐபிஎல் தொடரில் ஒரு வெளிநாட்டு வீரர் குவித்த அதிகபட்ச ரன்னாக அமைந்தது.

ஆனால் அதற்கு அடுத்த ஆண்டு பட்லர் 392 ரன்கள் மட்டுமே குவித்தது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை வெளிப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடரில் 2016 ஆம் ஆண்டு 923 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவராக இருக்கும் விராட் கோலி அழுத்தத்தை எப்படி கையாளுகிறார் என்று பட்லர் கேட்டதாகவும் அதற்கு விராட் கோலி கூறிய அறிவுரைகள் தன்னை எப்படி மீட்டது என்பது குறித்தும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியின் அறிவுரை

இதுகுறித்து பட்லர் கூறும் போது “2022 ஆம் ஆண்டு ஒரு சீசனில் நான் 863 ரன்கள் குவித்தேன். ஆனால் அதற்கு அடுத்த வருடம் எனக்கு மோசமாக அமைந்தது. அதேசமயம் விராட் கோலி 2016ஆம் ஆண்டு 973 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்த வீரராக இருக்கிறார். எனக்கு அந்த சீசன் மிகவும் கடினமாக அமைந்ததால் அழுத்தத்தை எப்படி சமாளிப்பது என்பதில் சற்று தடுமாறினேன். நாங்கள் ஆர்சிபி அணிக்கு எதிராக விளையாடுவதற்காக பயிற்சி செய்து கொண்டிருந்தோம். விராட் கோலி ஒரு மிகப்பெரிய போட்டியாளர். அவர் மைதானத்தில் எல்லோரிடமும் ஆக்ரோஷமாக நடந்து கொள்வார் என்பதைப் போல உணர்ந்தேன். அவர் பயிற்சி முடித்து சென்று கொண்டிருந்தபோது அவரிடம் இரண்டு விஷயங்கள் கேட்க வேண்டும் என்று தோன்றியது.

இதையும் படிங்க:இங்கிலாந்து டெஸ்ட்.. 2 இந்திய வீரர்களால் கம்பீர் கில்லுக்கு பெரிய தலைவலி.. என்ன முடிவெடுப்பார்கள்?

முக்கியமாக எதிர்பார்ப்புகளை எப்படி நிர்வகிப்பது என்பது பற்றியது, உலக கிரிக்கெட்டில் விராட் கோலி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. ஒன்றை பில்லியன் மக்கள் அவர் மீது அதிக அளவு எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். அவர் அப்போது எனக்கு அந்த நேரத்தை தாராளமாக செலவிட்டார். மிகவும் உதவிகரமாக இருந்தார். அப்போது விராட் கோலி என்னிடம் ‘நீங்கள் அந்த ஆண்டு அதிக ரன்கள் குவித்தீர்கள் என்றால் அந்த வருடம் தான் உங்களுக்கு சிறப்பான வருடமாக இருக்கும் என நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை தொடர்ந்து பிரதிபலிக்க முயற்சிக்காதீர்கள். நீங்கள் உங்கள் மீது செலுத்தப்படும் அழுத்தத்தை உணர முயற்சிக்காதீர்கள். இப்போது வாழ்க்கை நன்றாக போகிறது என்றால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று விராட் கோலி கிரிக்கெட் நுண்ணறிவோடு பேசியது எனக்கு பெரிய உதவியை அளித்தது” என பட்லர் கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by