இங்கிலாந்து டெஸ்ட்.. 2 இந்திய வீரர்களால் கம்பீர் கில்லுக்கு பெரிய தலைவலி.. என்ன முடிவெடுப்பார்கள்?

0
582
Gill

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு இந்திய பிளேயிங் லெவலை அமைப்பதில் இரண்டு இந்திய வீரர்களால் புதிய தலைவலி இந்திய கேப்டன் மற்றும் பயிற்சியாளருக்கு ஏற்பட்டிருக்கிறது.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி ஜூலை இருபதாம் தேதி தொடங்க இருக்கிறது. தற்போது பேட்டிங் யூனிட்டை அமைப்பதில் இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரிய குழப்பம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பவுலிங் யூனிட்டில் யார்?

தற்போது இந்திய பவுலிங் யூனிட்டில் வேகப் பந்துவீச்சாளர்களாக யார் இடம் பெறுவார்கள் என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. பும்ரா நிச்சயம் விளையாடுவார் என்பது உறுதியானதாக இருக்கும் நிலையில் சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் அர்ஸ்தீப் சிங் மூவரில் எந்த இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

மேலும் நேரடியாக சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களுக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவை விளையாட வைப்பதற்கான யோசனையும் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அதிரடியாக விளையாடும் இங்கிலாந்தை கட்டுப்படுத்த அதிரடி சுழல் பந்துவீச்சாளர் தேவையாக இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தலைவலி தரும் இருவர்

இந்த நிலையில் வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இடத்திற்கு நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் சர்துல் தாக்கூர் இருவர் இருக்கிறார்கள். இதில் மூன்று பயிற்சி போட்டிகளில் விளையாடியிருக்கும் நிதிஷ் குமார் ரெட்டி பெரிய அளவில் செயல்படவில்லை. ஆனாலும் பேட்டிங் ஆல் ரவுண்டர் என்பதாலும், ஐந்தாவது பந்துவீச்சாளராகவே இவர் இருப்பார் என்பதாலும் இவர்தான் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதையும் படிங்க : அகர்கர் ஐபிஎல்-ல பாக்காதீங்க.. என்னை மாதிரி ஆள செலக்ட் பண்ண இதை பாருங்க – கருண் நாயர் கோரிக்கை

இந்த நிலையில் பயிற்சி போட்டிகளில் பந்துவீச்சில் சர்துல் தாக்கூர் ஓரளவுக்கு சிறப்பாகவே இருந்தார். மேலும் கடைசியாக இந்திய அணிக்குள் நடந்த பயிற்சி போட்டியில் சதம் அடித்து 122 ரன்கள் குவித்து பேட்டிங்கிலும் அசத்தினார். இதன் காரணமாக இருவரில் யாரை தேர்வு செய்வது என்கின்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. குல்தீப் யாதவை விளையாடாவிட்டால் சர்துல் தாகூர் விளையாடலாம். குல்தீப் யாதவ் விளையாடினால் நிதீஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -