பாபர் அசாம தூக்கணும்.. இவங்க 2 பேர் பாவம் இல்லையா.. இது தப்பான நடவடிக்கை – ஷாகித் அப்ரிடி விமர்சனம்

0
35
Shahid

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அமெரிக்க அணியிடம் தோல்வி அடைந்தது. மேலும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றில் வெளியேறி எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெரிய நடவடிக்கைஎடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வித்தியாசமான நடவடிக்கையை எடுத்து இருக்கிறது. இதுகுறித்து ஷாகித் அப்ரிடி விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில்அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் பாகிஸ்தான அணி வெளியேறியது. இதன் காரணமாக கேப்டன் பாபர் அசாம் பொறுப்பில் இருந்து விலகினார்.

- Advertisement -

மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது. தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரர் வகாப் ரியாஸ் கொண்டுவரப்பட்டார். ஆண்கள் மற்றும் பெண்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு உறுப்பினராக முன்னாள் வீரர் அப்துல் ரசாக் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் முன்பே தேர்வுக்குழு தலைவர் பொறுப்பிலிருந்து வகாப் ரியாஸ் நீக்கப்பட்டு தேர்வுக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். தற்போது இவர்கள் இருவரையுமே தேர்வுக்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியாக நீக்கி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசி இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறும் பொழுது ” பாபர் அசாம் போல எந்த கேப்டனுக்கும் இவ்வளவு பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. பொதுவாக உலக கோப்பையில் இப்படி ஒரு தோல்வி ஏற்பட்ட பின் கேப்டன்தான் டிஸ்மிஸ் செய்யப்படுவார். ஆனால் இங்கு தலைகீழாக நடந்திருக்கிறது.

இதையும் படிங்க : பயிற்சியாளர் குழுவை கூண்டோடு மாற்றும் கம்பீர்.. ரோகித் வழிகாட்டிக்கு முக்கிய இடம்.. அதிரடி திட்டம்

நான், மிஸ்பா, யூனுஸ் கான் நாங்களும் கேப்டனாக பாகிஸ்தான் அணியை வழிநடத்தி இருக்கிறோம். ஆனால் எங்களுக்கு இது போன்ற வாய்ப்புகள் கொடுக்கப்பட்டது இல்லை. பாபர் அசாமுக்கு நல்ல நேரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர் தீர்க்கமாக ஒரு முடிவு எடுத்து சென்றால் நாங்கள் அதை ஆதரிக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -