பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இளம் நம்பிக்கை நட்சத்திரம் ஹாரி புரூக் முச்சதம் அடித்து அசத்தியிருக்கிறார். 34 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பாகிஸ்தானில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் மூன்று வீரர்கள் சதம் எடுத்து 556 ரன்கள் குவித்தது.
இந்த நிலையில் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக அமைக்கப்பட்ட மோசமான ஆடுகளம் என விமர்சிக்கப்பட்ட ஆடுகளத்தில் இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன்கள் விஸ்வரூபம் எடுத்தார்கள். துவக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிரவுலி மற்றும் பென் டக்கெட் இருவரும் அதிரடியான அரை சதங்கள் அடித்து வெளியேறினார்கள்.
இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை வெறுப்பேற்றி விட்டார்கள். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியதில் இருவருமே 250 ரன்கள் தாண்டினார்கள். மேலும் 522 பந்தில் 454 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார்கள். சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் 375 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 262 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஜோ ரூட் தொடர்ந்து மிகச்சிறப்பாக விளையாடி வந்த ஹாரி புரூக் சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் முச்சதத்தை அடித்தார். இறுதியாக அவர் 29 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 322 பந்துகளில் அதிரடியாக 317 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க : 700/3.. இங்கிலாந்து அணி புது ரெக்கார்டு.. பாகிஸ்தானில் இந்தியாவின் 20 வருட சாதனை உடைந்தது.. அதிரடி பேட்டி
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முச்சதம் அடித்த நான்காவது இங்கிலாந்து வீரராக பதிவானார். இறுதியாக 1986 ஆம் ஆண்டு இங்கிலாந்து வீரர் கிரஹாம் கூச் இந்திய அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் முச்சதம் அடித்திருந்தார். அதற்குப் பிறகு 34 வருடங்கள் கழித்து இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்திருக்கிறார். மேலும் முல்தான் மைதானத்தில் சேவாக் அடித்திருந்த முச்சத ரன்களை தாண்டி அடித்து சாதனை படைத்திருக்கிறார்.