700/3.. இங்கிலாந்து அணி புது ரெக்கார்டு.. பாகிஸ்தானில் இந்தியாவின் 20 வருட சாதனை உடைந்தது.. அதிரடி பேட்டி

0
146
Root

தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியான முறையில் விளையாடி ஆச்சரியமான சாதனைகளை படைத்து வருகிறது.

இதில் பாகிஸ்தான் மண்ணில் 20 வருடங்களுக்கு முன்னால் இந்திய அணி படைத்திருந்த ஒரு முக்கியமான சாதனையை இங்கிலாந்து அணி முறியடித்திருக்கிறது. மேலும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் 250 ரன் தாண்டி அடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ருத்ர தாண்டவம் ஆடிய இங்கிலாந்து கூட்டணி

இந்த போட்டியில் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமாக தார் சாலை போல அமைக்கப்பட்டிருந்தது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷபிக், ஷான் மசூத் மற்றும் ஆகா சல்மான் என மூன்று வீரர்கள் சதம் அடிக்க, அந்த அணி 556 ரன்கள் எடுத்தது.

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் இரட்டை சதம் அடித்ததோடு 250 ரன் தாண்டினார்கள். இதனால் இங்கிலாந்து அணி வெறும் மூன்று விக்கெட் இழப்புக்கு 700 ரன்கள் தாண்டி அசத்தியது. இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தானில் படைத்த முக்கியமான சாதனை ஒன்று 20 வருடங்களுக்கு பிறகு முறியடிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

2004 முல்தான் டெஸ்ட்

இந்திய அணி 2004 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் முல்தான் டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட் இழப்புக்கு 675 ரன்கள் குவித்தது. அந்த போட்டியில் சேவாக் முச்சதம் அடித்திருந்தார். இதுவே பாகிஸ்தான் மண்ணில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன்னாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தது.

இதையும் படிங்க : இந்தியா மாதிரி ஆடினால் தலையில்தான் அடிபடும்.. தோல்விக்கு காரணம் எங்க ஆள் இவர்தான் – டஸ்கின் அகமத் ஓபன் பேட்டி

தற்போது இருபது வருடங்கள் கழித்து இங்கிலாந்து அணி இந்த சாதனையை முறியடித்து இருக்கிறது. ஜோ ரூட் மற்றும் ஹரி புரூக் இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 522 பந்துகளில் 454 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தான் அணிக்கு பெரிய தலைவலியை உருவாக்கினார்கள். இறுதியாக ஜோ ரூட் 375 பந்துகளில் 262 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். தற்போது இங்கிலாந்து அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 700 ரன்கள் தாண்டி எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

- Advertisement -