இங்கிலாந்து கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களிலும் விளையாடக்கூடிய இளம் பேட்ஸ்மேனாக ஹாரி புரூக் நம்பிக்கை தருகிறார். நேற்று வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முடிந்த இரண்டாவது டெஸ்டில் சதம் அடித்த அவர் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ரன் ஆவரேஜில் வந்து அசத்தியிருக்கிறார்.
தற்பொழுது 25 வயதாகும் ஹாரி புரூக் மூன்று வடிவத்திலும் சீராக ரன்கள் குவிக்கும் திறமையை பெற்றிருக்கிறார். விராட் கோலிக்கு அடுத்தபடியாக மூன்று வடிவத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆட்டத்தை விளையாட கூடியவராக தெரிகிறார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இவருடைய பேட்டிங் நம்ப முடியாத அளவுக்கு இருக்கிறது.
இங்கிலாந்து அணி அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வருவதில் இவருடைய பங்கு மிடில் ஆர்டரில் அதிகமாக இருக்கிறது. உதாரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 90.70. அதாவது 100 பந்துகளை சந்தித்தால் ஏறக்குறைய 90 ரன்கள் அடிக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் போல டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி கொண்டு வருகிறார்.
இதுவரையில் ஹாரி புரூக் 14 டெஸ்ட் போட்டிகளில் 23 இன்னிங்ஸ்கள் மட்டுமே விளையாடி 1376 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் அதிகபட்சமாக 186 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 8 அரை சதங்கள் அடித்ததுடன் 5 சதங்களும் அடித்திருக்கிறார்.மேலும் இவருடைய ஆவரேஜ் 62.54 என பிரம்மாண்டமாக இருக்கிறது. அதாவது இவர் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடினால் 62 ரன்கள் அடிக்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு டெஸ்ட் போட்டிக்கு ஒட்டுமொத்தமாக 124 ரன்கள் எடுக்கிறார் என்று அர்த்தம்.
இந்த வகையில் ரன் ஆவரேஜில் உலக கிரிக்கெட்டின் ஆச்சரியமான பேட்ஸ்மேனாக பார்க்கப்படும் டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக ஹாரி புரூக் உயர்ந்திருக்கிறார். சர்வதேச டெஸ்டில் குறைந்தது 20 இன்னிங்ஸ்கள் விளையாடியவர்கள் பட்டியலில் ரன் ஆவரேஜில் இவர் இரண்டாவது இடத்தில் தற்பொழுது இருந்து வருகிறார். இந்தப் பட்டியலில் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ஜோ ரூட் , கேன் வில்லியம்சன் என பெரிய தலைகள் யாருமே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தோனி பாய் பத்தி கனவு இருந்தது.. அது உடைஞ்சப்ப மோசமா உணர்ந்தேன்.. நான் இப்படித்தான் – ஷிவம் துபே பேட்டி
குறைந்தது 20 டெஸ்ட் இன்னிங்ஸ்கள் விளையாடி அதிக டெஸ்ட் ரன் ஆவரேஜ் வைத்திருக்கும் பேட்ஸ்மேன்கள் :
டான் பிராட்மேன்- 99.94
ஹாரி புரூக்- 62.55
ஆடம் வோஜஸ் – 61.87
கிரேம் பொல்லாக் – 60.97
ஜார்ஜ் ஹெட்லி – 60.83






