இங்கிலாந்து அணி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது.
நடைபெற்று வரும் 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் பாகிஸ்தான் அணிக்கு இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. அதே சமயத்தில் இங்கிலாந்து அணி தற்பொழுது டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுக்கு கிடைத்திருக்கும் வேகத்தை அப்படியே தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டிய அவசியத்தில் இருக்கிறது. எனவே இந்த டெஸ்ட் தொடரில் வெற்றிக்காக இரண்டு அணிகளும் கடுமையாக மோதும்.
இரண்டு நட்சத்திர வீரர்கள் இல்லை
இலங்கைக்கு எதிராக உள்நாட்டு டெஸ்ட் தொடரில் காயமடைந்த அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட் பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் பெறவில்லை. பாகிஸ்தான் தற்பொழுது வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கும் நிலையில் இது இங்கிலாந்து அணிக்கு ஒரு பின்னடைவாக இருக்கிறது.
அதே சமயத்தில் இங்கிலாந்து அணியின் மூத்த விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ இந்த முறையும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. இளம் விக்கெட் கீப்பர்கள் ஜோர்டான் காக்ஸ் மற்றும் ஜேமி ஸ்மித் இருவரும் விக்கெட் கீப்பர்களாக இடம் பெற்று இருக்கிறார்கள்.
இங்கிலாந்து அணிக்கு 2 நல்ல விஷயங்கள்
உள்நாட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விரலில் காயம் அடைந்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பெறாத துவக்க வீரர் ஜாக் கிரவுலி மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்பி வருகிறார்.
அதே சமயத்தில் இங்கிலாந்து 100 பந்து போட்டியில் காயமடைந்த இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் காயம் சரி அடைந்து மீண்டும் இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு திரும்பி வருகிறார். இவர்கள் இருவரும் திரும்பி வருவது இங்கிலாந்து அணியை பலமாக, பாகிஸ்தான் அணிக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க : பிசிசிஐ கேட்ட உதவி செய்யல.. எங்க ஊர்ல நொய்டாவை விட நல்ல மைதானம் இருக்கு – ஆப்கான் கிரிக்கெட் வாரியம் ஏமாற்றம்
பாகிஸ்தான் டெஸ்ட் தொடருக்கான 17 பேர் கொண்ட இங்கிலாந்து அணி :
பென் ஸ்டோக்ஸ், ரெஹான் அகமது, கஸ் அட்கின்சன், ஷோயிப் பஷீர், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜோர்டான் காக்ஸ், ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஜோஷ் ஹல், ஜாக் லீச், ஒல்லி லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன் மற்றும் வோக்ஸ்.