உலக கிரிக்கெட்

20 ஓவர் 304 ரன்.. சூறையாடிய பில் சால்ட்.. 2 உலக சாதனையை படைத்த இங்கிலாந்து.. தெஆ பரிதாபம்

இன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி பிரம்மாண்டமான இரண்டு உலகச் சாதனைகளை படைத்து ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பின்னி எடுத்த பட்லர்

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக வந்த ஜோஸ் பட்லர் தன்னுடைய வழக்கமான அதிரடியில் மீண்டும் வந்து மிரட்டினார். மிகச் சிறப்பாக விளையாடிய அவர் வெறும் 30 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 7.5 ஓவரில் 126 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி வெறும் பத்து ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து மிரட்டியது. மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பத்து ஓவருக்கு அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் உலகச் சாதனையாக இது பதிவாகியது.

- Advertisement -

பில் சால்ட் சூறையாட்டம்

இதைத் தொடர்ந்து இன்னொரு முனையில் அதிரடியை நிறுத்தாத பில் சால்ட் 39 பந்துகளில் சதம் அடித்தார். தொடர்ந்து இறுதி வரை களத்தில் நின்று 60 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 141 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் அடித்த அதிகபட்ச ரன்னாக இது அமைந்தது.

மேலும் இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது. முழு உறுப்பினர் கிரிக்கெட் நாடுகள் விளையாடிய சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக இங்கிலாந்து 300 ரன்கள் தாண்டி உலகச் சாதனை படைத்தார்.

இதையும் படிங்க : பாகிஸ்தானுடன் போட்டி.. வியாபாரமும் விளையாட்டும் இருக்க கூடாது – ஹர்பஜன் ஆச்சரிய தைரிய பேச்சு

முழு உறுப்பினர் அணிக்கு எதிராக டி20களில் அதிக ரன்கள்:

304/2 சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து – மான்செஸ்டர் 2025
297/6 பங்களாதேஷுக்கு எதிராக இந்தியா – ஹைதராபாத் 2024
283/1 சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா – ஜோபர்க் 2024
278/3 அயர்லாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் – டெஹ்ராடூன் 2019
267/3 வெஸ்ட் இண்டீஸ் எதிராக இங்கிலாந்து – தருபா 2023

- Advertisement -
Published by

Recent Posts