இந்திய கிரிக்கெட்

3-0.. மொக்கை வாங்கிய இலங்கை அணி.. வச்சு செய்த இங்கிலாந்து – பரிதாபமான தொடரின் முடிவு

இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஒயிட் வாஷ் ஆகி தோல்வியடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி இங்கிலாந்து சென்றுள்ளது. இதில் முதலில் நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளிலும் இலங்கை அணி பரிதாபமாக தோல்வி அடைந்திருந்தது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பதும் நிஷாங்க்கா 24 பந்துகளில் 36 ரன்கள், கமிந்து மெண்டிஸ் 28 பதிவுகளில் 35 ரன்கள் எடுத்தார்கள். அந்த அணி 18.5 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. பேக்கர், ஆர்ச்சர் மற்றும் வில் ஜேக்ஸ் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் பட்லர் இறுதிவரை நின்று அதிரடியில் மிரட்டி 32 பந்தில் 64 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹரி ப்ரூக் 21 பந்தில் 33 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இந்த போட்டியில் இலக்கை அணியை இலக்கை வெறும் 9.4 ஓவர்களில் எட்டி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்து தொடரை வென்றது.

- Advertisement -
Published by