உலக கிரிக்கெட்

1085 ரன்ஸ்.. 3 நாட்களில் முடிந்த முதல் டெஸ்ட்.. மாஸ் காட்டிய இங்கிலாந்து.. ஜிம்பாப்வே பரிதாப தோல்வி

இங்கிலாந்து ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டி நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியாக நடத்தப்பட்டது. முதலில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்து வீசுவதாக அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜாப் கிரவுலி 171 பந்தில் 124 ரன்கள், பென் டக்கெட் 134 பந்தில் 140 ரன்கள், ஒல்லி போப் 166 பந்தில் 171 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 565 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

பாலோ ஆன் ஆன ஜிம்பாப்வே

இதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு துவக்க ஆட்டக்காரர் பிரண்டன் பென்னெட் சிறப்பாக விளையாடி சதம் அடித்து 143 பந்துகளில் 139 ரன்கள் எடுத்தார். கேப்டன் கிரேஜ் எர்வின் 64 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். ஜிம்பாப்வே அணி 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆகியது. சோயப் பஷீர் மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு சீன் வில்லியம்ஸ் 82 பந்தில் 88 ரன்கள், சிக்கந்தர் ராஸா 68 பந்தில் 60 ரன்கள் எடுத்தார்கள். முடிவில் ஜிம்பாப்வே அணி 255 ரன்கள் எடுத்து மீண்டும் ஆல் அவுட் ஆகியது.

- Advertisement -

மூன்று நாட்களில் 1085 ரன்கள்

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை வென்றது. இரண்டாவது இன்னிங்ஸில் சோயப் பசீர் அற்புதமாக பந்த வீசி ஆறு விக்கெட் கைப்பற்றினார்.

இதையும் படிங்க : இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. திறமை இருந்தும் வாய்ப்பு கொடுக்கப்படாத 5 ஸ்டார் வீரர்கள் – முழு பட்டியல்

இந்த போட்டியில் மூன்று நாட்கள் முழுதாக முடிவடையாத நிலையில் மொத்தம் 1085 ரன்கள் அடிக்கப்பட்டிருக்கிறது. மேலும் நான்கு சதங்களும் அடிக்கப்பட்டிருக்கிறது. இங்கிலாந்து தனது வழக்கமான அதிரடியான பேட்டி முறையால் பலவீனமான ஜிம்பாப்வே அணியை புரட்டி எடுத்து வெற்றி இருக்கிறது.

- Advertisement -
Published by
Tags: Eng vs zim