ஒரு கேப்டனையே தூக்குற அளவுக்கு தைரியம் இருக்கு.. தேர்வுக் குழுவை இதற்கு நான் பாராட்டியே ஆகணும் – இர்பான் பதான்

0
86

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று t20 உலகக் கோப்பை தொடருக்கு புதிய புத்துணர்ச்சியோடு முன்னேறுகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் இந்திய அணியின் தேர்வு குறித்த சில முக்கிய கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த நியூசிலாந்து தொடருக்கு முன்பாக இந்திய அணியின் தொடக்க வீரரான சுப்மான் கில் துணை கேப்டனாக t20 அணிக்கு நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது செயல்பாடு பெரிய அளவில் இல்லாத நிலையில் டி20 உலக கோப்பைக்காண இந்திய அணியில் துணை கேப்டனாக இருந்த அவரை தேர்வு குழு எந்தவிதமான பாரபட்சமும் இன்றி தூக்கியது. மேலும் அப்போது உள்நாட்டுத் தொடரில் விளையாடிய இஷன் கிஷன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு பெற்றார்.

அந்த வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்திக் கொண்ட இஷான் கிஷன், தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் ஐந்தாவது போட்டியில் சதம் அடித்து தனது வருகையை மிக ஆணித்தரமாக நிலைநாட்டினார். இந்த சூழ்நிலையில் இர்பான் பதான் இந்திய கேப்டன் ஒருவரை நீக்கியது மட்டுமல்லாமல் உள்நாட்டு தொடரில் விளையாடிய ஒருவரை அணியில் சேர்த்ததற்கு தேர்வு குழுவினரை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும் என்று சில விஷயங்கள் பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “உள்நாட்டுத் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட இஷான் கிசனை மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்ததற்கு தேர்வு குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தே ஆக வேண்டும். ஷுப்மான் கில் போன்ற ஒருவரை அணியிலிருந்து நீக்கிவிட்டு உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இசான் கிஷானை தேர்வு செய்ததற்கு அவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கின்றன.

ஆனால் இது எளிதான விஷயம் கிடையாது. வாய்ப்பு பெற்றாலும் இஷான் கிஷன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தன்னை நிலைநாட்டி இருக்கிறார். திலக் வர்மா திரும்பினாலும் இசான் கிஷான் பெஞ்சில் உட்கார வைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கிறார். அவரால் டாப் ஆர்டரில் எந்தவித சிரமமும் இன்றி பேட்டிங் செய்ய முடியும். ஆஃப் சைடில் மெதுவான விக்கெட்டில் மட்டும் அவர் எப்படி பேட்டிங் செய்கிறார் என்பதை பார்ப்பதற்கு சுவாரசியமாக இருக்கும். ஆனால் தட்டையான பந்து நன்றாக வரும் விக்கெட்டில் அவரை நிறுத்துவது என்பது கடினமான காரியம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -