தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஸஸ் நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அதிரடியாக திரும்பி வந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.
இங்கிலாந்து அணி ஏற்கனவே முதல் மூன்று போட்டிகளை தோற்று விட்டதால் தொடரை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நான்காவது மற்றும் பாக்சிங் டே டெஸ்டில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை இங்கிலாந்து தேர்வு செய்தது.
பேட்ஸ்மேன்களின் நரகம்
இந்த போட்டி நடைபெறும் மெல்போன் மைதானத்தின் ஆடுகளம் பந்துவீச்சுக்கு அதிசாதகமாக அமைக்கப்பட்டிருந்தது. இதனால் பேட்ஸ்மேன்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா 152 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோஸ் டங் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
இதைத்தொடர்ந்து விளையாட வந்த இங்கிலாந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தது. மைக்கேல் மேசர் நான்கு விக்கெட் வீழ்த்தினார். முதல் நாளிலே 20 விக்கெட்டுகள் விழ ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட வந்து, விக்கெட் இழப்பில்லாமல் நான்கு ரன்கள் எடுத்திருந்தது.
பொறுப்பாக மாறிய இங்கிலாந்து
இன்று இரண்டாவது நாளில் பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணிக்கு ஹெட் 67 பந்துகளில் 46 ரன்கள், கேப்டன் ஸ்மித் ஆட்டம் இழக்காமல் 39 பந்தில் 24 ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக ஆஸ்திரேலியா அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. பிரைடன் கார்ஸ் நான்கு விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து 175 ரன்கள் இலக்கை நோக்கி விளையாட வந்த இங்கிலாந்து அணி முதல் இரண்டு விக்கெட்டுகளை வேகமாக இழந்தது. இதற்கு அடுத்து தாக்குப்பிடித்து விளையாடிய ஜாக் கிரவுலி 37, அதிரடியாக விளையாடிய டக்கெட் 34, ஜேக்கப் பெத்தேல் 40 ரன்கள் எடுத்தது இங்கிலாந்துக்கு வெற்றியை எளிதாக்கியது.
இதையும் படிங்க : விஜய் ஹசாரே டிராபி.. திடீரென வெளியேறும் விராட் கோலி ரோகித் சர்மா.. என்ன காரணம்? – வெளியான தகவல்கள்
இதைத்தொடர்ந்து ஒரு முனையில் நின்ற ஹாரி ப்ரூக் ஆட்டம் இழக்காமல் 18 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி ஆறு விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 14 வருடங்களுக்கு பிறகு ஒரு டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.






