205 ரன்.. பாஸ்பாலுக்கு மனம் தளராத இலங்கை.. கிளாசை காட்டிய ரூட்.. இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் வெற்றி

0
351
Root

இங்கிலாந்து மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் இங்கிலாந்து இலங்கை அணிகள் மோதிக்கொண்ட முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிரடியான முறையில் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடி வரும் இங்கிலாந்து அணி மிக எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் இலங்கை அணி முடிந்து வரையில் இங்கிலாந்து அணிக்கு சவால் கொடுத்தது.

- Advertisement -

சவால் அளித்த இலங்கை அணி

இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்து 113 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து விட்டது. இதற்குப் பிறகு கேப்டன் தனஞ்செய டி சில்வா 74 மற்றும் அறிமுக வீரர் மிலன் ரத்னாயகே 72 ரன்கள் எடுக்க 236 ரன்கள் முதல் இன்னிங்சில் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் சோயப் பஷீர் மூன்று விக்கெட் வீழ்த்தினார்கள்.

இதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய இங்கிலாந்து அணிக்கு துணை கேப்டன் ஹாரி புரூக் 56 மற்றும் விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 111 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 358 ரன்கள் சேர்த்தது. இலங்கை தரப்பில் அசிதா பெர்னாடோ நான்கு விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

இதற்கு அடுத்து 122 ரன்கள் பின் தங்கிய நிலையில் விளையாடிய இலங்கை அணிக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் 65, தினேஷ் சண்டிமால் 79, கமிந்து மெண்டிஸ் 113 ரன்கள் எடுக்க, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 326 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ் மற்றும் மேத்யூ பாட்ஸ் தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.

இங்கிலாந்து அணி வெற்றி

இங்கிலாந்து அணி 205 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடியது. இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் பென் டக்கெட் 11, டான் லாரன்ஸ் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். தொடர்ந்து கேப்டன் ஒல்லி போப் 6, ஹாரி புரூக் மற்றும் ஜேமி ஸ்மித் 39 ரன்களில் வெளியேறினார்கள்.

இதையும் படிங்க : தம்பி ஷிகர் தவான் என் கூட வந்துருங்க.. நீங்க கப்பார்னு எல்லாருக்கும் காட்டிட்டிங்க – யுவராஜ் சிங் அழைப்பு

இந்த நிலையில் இறுதிவரை களத்தில் நின்று மிகச் சிறப்பாக விளையாடிய நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 128 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். அவருடன் இணைந்து நின்ற கிறிஸ் வோக்ஸ் 8 ரன்கள் எடுத்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 25 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இலங்கை அணியின் தரப்பில் அசிதா பெர்னாடோ மற்றும் பிரபாத் ஜெயசூர்யா தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -