சச்சின் கோலி இல்லை.. எனது அடையாளம் இந்த ஜாம்பவான்தான்.. ஐபிஎல்லில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய 13 வயது வீரர்

0
926

சமீபத்தில் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்தில் பீகாரைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வாங்கப்பட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். தற்போது அவர் துபாயில் நடந்து வரும் ஆசிய கோப்பை அண்டர் 19 இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார்.

இந்த சூழ்நிலையில் 13 வயது வீரரான வைபவ் சூர்யவன்ஷி கிரிக்கெட்டில் தனது அடையாளமாக ஜாம்பவான் வீரர் ஒருவரை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் தனது அடையாளம்

18வது ஐபிஎல் சீசன் தொடர் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான மெகா ஏலம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக துபாயில் உள்ள ஜெட்டாவில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட 10 ஐபிஎல் அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து தங்கள் அணிகளை கட்டமைத்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 வயது ஆன பீகாரைச் சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி எனும் இளம் கிரிக்கெட் வீரரை 1.10 கோடி ரூபாய்க்கு தங்கள் அணிக்கு வாங்கியது.

இதன் மூலமாக குறைந்த வயதில் ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்பு பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை வைபவ் படைத்திருக்கிறார். இவர் தற்போது துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை அண்டர் 19 தொடரில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைபவ் கிரிக்கெட்டில் தனது அடையாளமாக வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் வீரர் பிரைன் லாராவை கருதுகிறார். அவரைப் போல விளையாட வேண்டும் என்று சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கிரிக்கெட்டில் பிரைன் லாரா என்னுடைய அடையாளமாக கருதுகிறேன். அவரைப் போல நான் விளையாட முயற்சிக்கிறேன். என்னிடம் இருக்கும் திறமைகளைக் கொண்டு இயல்பாக விளையாட முயற்சிக்கிறேன். அதில் நான் பணியாற்ற விரும்புகிறேன். தற்போது என்னுடைய ஆட்டத்தில் மட்டுமே நான் முழு கவனம் செலுத்தி வருகிறேன். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து எனக்கு கவலை இல்லை. நான் தற்போது ஆசிய கோப்பையில் விளையாடி வருவதால் அதில் மட்டுமே சிறப்பாக செயல்பட கவனம் செலுத்தி வருகிறேன்.

இதையும் படிங்க:அஸ்வின் இதை எப்ப வேணா செய்யலாம்.. அதுக்குதான் சுந்தர பிசிசிஐ ரெடி பண்ணுது – ஹர்பஜன் சிங் சொல்லும் சீக்ரெட்

எனது அடிப்படையில் சில வேலைகளை செய்து கிரிக்கெட்டில் நன்றாக செயல்படுவதே எனது முக்கிய நோக்கம்” என்று கூறியிருக்கிறார். 13 வயதில் ஐபிஎல் தொடரில் அறிமுகமான நிலையில் இவர் மற்ற இந்திய மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும் இன்றைய மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் இவர் ஒரு எடுத்துக்காட்டாக எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் இந்திய அடையாளங்களாக சச்சின் டெண்டுல்கர்,தோனி, விராட் கோலி ஆகியோர் இருக்கும்போது வைபவ் தனது அடையாளமாக வெஸ்ட் இண்டீஸ் வீரனை தேர்வு செய்திருப்பது சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -