இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையான 4வது டெஸ்ட் போட்டி இன்று ஓல்டு ட்ராப்போர்ட் மைதானத்தில் துவங்குகிறது. தற்போது நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டுக்கு ஒன்று என இங்கிலாந்து அணி முன்னிலையில் இருக்கிறது.
இந்த 4வது டெஸ்ட் போட்டிக்கு இங்கிலாந்து அணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியமான மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இங்கிலாந்து அணியில் இருந்த ஒரே சுழல் பந்துவீச்சாளரான சோயப் பஷீர் நீக்கப்பட்டு ஆல்ரவுண்டர் லியான் டவுசன் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
இங்கிலாந்து அணி நிர்வாகம் ஜோ ரூட்டை சோயப் பஷீர் இடத்திற்கு பயன்படுத்தும் என்று தெரிகிறது. இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை தற்பொழுது 11 வரையில் நீண்டிருக்கிறது. இங்கிலாந்து அணியின் ஆரம்ப விக்கட்டுகளை கைப்பற்றினாலும் இறுதி விக்கட்டுகளை கைப்பற்றுவது கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மூன்று போட்டிகளில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கப்பட்ட கருண் நாயர் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு சாய் சுதர்சன் கொண்டுவரப்பட்டு இருக்கிறார். மேலும் ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் ரெட்டி ரூல்ட் அவுட் ஆன காரணத்தினால் சர்துல் தாக்கூர் இடம் பெற்றிருக்கிறார்.
மேலும் மிக முக்கியமாக மூன்றாவது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு அறிமுக வாய்ப்பை அன்சூல் காம்போஜ் பெறுகிறார். வெற்றி பெற்றாக வேண்டிய வாழ்வா சாவா போட்டிக்கு இந்திய அணி அதிரடியாக மூன்று மாற்றங்களை செய்திருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய அணியை அதை செய்யவே விடமாட்டோம்.. முன்வச்ச கால் பின்னுக்கு போகாது – பென் ஸ்டோக்ஸ் சவால்
இந்திய பிளேயிங் லெவன்: ஜெய்ஸ்வால், கேஎல்.ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், சர்துல் தாக்கூர், அன்சூல் காம்போஜ் பும்ரா மற்றும் சிராஜ்.