அமீர் அளவுக்கு நான் இறங்க விரும்பல.. நம்ம அளவுக்கு அவங்களால வரவே முடியாது.. ஒரு சம்பவத்தை சொல்றேன் – முகமது கைப் விமர்சனம்

0
14
Kaif

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் இந்திய அணி மற்றும் அபிஷேக் சர்மா குறித்து கூறும் கருத்துகளுக்கு இந்திய தரப்பில் இருந்து பதில் சொல்ல அவசியம் இல்லை என முகமது கைப் தெரிவித்திருக்கிறார்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது என முகமது அமீர் கூறியிருந்தார். மேலும் அபிஷேக் ஷர்மா பொதுவாக பேட்டை சுற்றக்கூடியவர் என்றும் விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து முகமது கைப் மிகவும் காட்டமான முறையில் பதில் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

அமீருக்கு இது தெரியாதா?

இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னால் வீரர் அமீர் இந்திய அணி பற்றி ஏன் இப்படி எல்லாம் பேசி வருகிறார்? இதற்கு இந்திய தரப்பிலிருந்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முகமது கைப் பதிலடி உடன் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அமீருக்கு இந்தியா அரையிறுதி வரும் என்று தெரியாதா? நிச்சயமாக நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தகுதி பெற்று விடும் என்று அவருக்கு தெரியும். ஆனால் எதிர்மறையாக பேசினால்தான் அவர்களுக்கு விளம்பரம் கிடைக்கும் என்று இப்படி பேசுகிறார்கள். நாம் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது. இவர்கள் அளவுக்கு நாம் இறங்க வேண்டிய அவசியம் இல்லை”

- Advertisement -

யார் காரணம்?

“2024 டி20 உலக கோப்பையில் அமெரிக்க அணிக்கு எதிரான பாகிஸ்தான் தோல்விக்கு முக்கிய காரணம் யார் இதே பவுலர்தான். அந்த ஓவரில் அவர் ஒரு பவுண்டரி மட்டும் கொடுத்திருந்தாலும் தொடர்ந்து பல வைடுகளை வீசி அணியை தோற்கடித்தான். அந்த போட்டியில் பயந்து கொண்டு பந்து வீசி அணியை தோற்கடித்தது இவர்தான். நான் இதற்கு மேல் சொல்ல வேண்டியதில்லை”

இதையும் படிங்க : சூரியகுமார் முதல்ல பெரிய டீம்க்கு எதிரா ரன் அடிக்கணும்.. 75% திறமையைக் காட்டினாலே பைனலில் இருப்போம் – ஹர்பஜன் சிங் கருத்து

“அவர்களுடைய நாடு கிரிக்கெட்டில் பின்தங்கியுள்ளது; அவர்களிடம் வீரர்கள் இல்லை; திடமான பவுலர் இல்லை; எதுவுமே இல்லை. எனவே அவர்களை அப்படியே விட்டுவிடுங்கள். அவர்களால் நம்முடைய நிலைக்கு வரவே முடியாது. அவர்களுக்கு வேறு பிரச்சனைகள் இருக்கிறது. நாம் அவர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நாம் அதை செய்யவே கூடாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -