“இந்திய அணியை வீழ்த்த.. நாங்க செஞ்சதை இங்கிலாந்து செய்யனும்” – தென்ஆப்ரிக்க ஆலன் டொனால்ட் ஐடியா

0
81
Donald

இந்த நூற்றாண்டில் டெஸ்ட் தொடரில் இந்தியாவில் இந்திய அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள்தான்.

ஆனால் அவர்களும் ஒரே ஒரு முறை மட்டும்தான் வீழ்த்தி இருக்கிறார்கள். இந்திய அணியை இந்தியாவில் டெஸ்ட் தொடரில் வெல்வது யாருக்கும் அவ்வளவு எளிதானது கிடையாது. குறிப்பாக ஆசிய நாடுகளை சேர்ந்த அணிகளுக்கே இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது மிக மிகக் கடினமானது.

- Advertisement -

மேலும் இந்திய ஆடுகளங்கள் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இங்கு இந்திய வேகப்பந்துவீச்சாளர்களே வெற்றிகரமாக இருப்பது என்பது கடினமான ஒன்று. இங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு ஆசியா தாண்டிய வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்கள் சாதிப்பது மிகவும் கடினம்.

ஆனால் இதற்கு விதிவிலக்காக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப் பந்துவீச்சு லெஜெண்ட் ஆலன் டொனால்ட் இருக்கிறார். அவர் மொத்தம் இந்தியாவில் நான்கு டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடி ஆனால் 121.2 ஓவர்கள் பந்துவீசி, 16.11 சராசரியில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

இவர் இங்கிலாந்து இந்தியாவில் எப்படி பந்து வீசினால் தொடரை வெல்லலாம் என்று கூறும்பொழுது “இந்தியாவில் புதிய பந்தில் 25 முதல் 30 ஓவர்கள் மிகவும் முக்கியமானது. இந்த நேரத்தில் நாங்கள் எப்பொழுதும் பேசுவது என்னவென்றால், எல்லா பந்துகளையும் ஸ்டெம்ப்பை நோக்கி ஃபுல் லென்த்தில் வீசுவது குறித்துதான். அதேபோல் பீல்டிங் செட்டிங் எப்பொழுதும் நேராகவே வைப்போம். பந்து இங்கு பெரிய அளவில் கேரி ஆகாது என்பது தெரியும். எனவே ஒவ்வொரு பந்தையும் ஸ்டெம்ப் நோக்கி வீசவைத்து விளையாட வைக்க வேண்டும்.

- Advertisement -

ஆரம்பக்கட்டத்தில் புதிய பந்தில் கொஞ்சம் ஸ்விங் இருக்கும் பொழுது நாம் அதைப் பயன்படுத்த வேண்டும். அதேபோல் புதிய பந்தை தாண்டியதும் நெகட்டிவ்வான ஃபீல்டை செட் பண்ண மாட்டோம். பாதுகாப்புக்காக கவரில் ஒரு எக்ஸ்ட்ரா பீல்டரை கொண்டு வருவோம். மேலும் மிட் விக்கெட்டில் ஒரு பீல்டரை நகர்த்தலாம்.

நாங்கள் எப்பொழுதும் பயிற்சியாளர்களிடம் சொல்வது, நாங்கள் நேராக பந்து வீசப் போகிறோம் என்றால், மிடில் ஸ்டெம்பை நோக்கி வீசுவது கிடையாது, ஆப் ஸ்டெம்ப் நோக்கி வீசுவதுதான். இப்படித்தான் புதிய பந்தை பயன்படுத்துவோம்.

இந்தியாவில் பந்து வீசுவது என்பது மிகவும் கடினமான வேலை. அதுவும் பார்ட்னர்ஷிப் கொஞ்சம் நீளமாக இருக்கும் பொழுது அல்லது பந்து கொஞ்சம் தேய்ந்து விட்ட பிறகு, மேலும் பந்து ஸ்விங் ஆகாமல் இருந்தால், அது உங்கள் மனநிலையை சோதிக்கும்.

ஆனால் எங்கள் அணியில் இருந்த ஹான்சி மற்றும் பாப் இருவரும் எப்பொழுதும் தாக்கம் தரக்கூடிய பந்துவீச்சாளர்களை தேர்ந்தெடுத்தார்கள். நீங்கள் புதிய பந்தில் ஆரம்பத்தில் நேராகவும் வேகமாகவும் வீச வேண்டும். அதற்குப் பின்பு உங்களிடம் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள்” என்று கூறியிருக்கிறார்.