இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி உடன் தற்பொழுது தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி இணைந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முடிவுக்கு வந்தது. இந்த தொடரை ஒன்றுக்கு நான்கு என இங்கிலாந்து இழந்தது. இதைத்தொடர்ந்து நாளை மறுநாள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டி நடக்க இருக்கிறது.
பலித்த ரவிச்சந்திரன் அஸ்வின் யூகம்
இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் 5 போட்டிகளில் வரும் சக்கரவர்த்தி மொத்தம் 14 விக்கெட்டுகள் கைப்பற்றி தொடர் நாயகனாக வந்தார். இதன் காரணமாக அவரை சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கைகள் வெளியில் எழுந்தது. தற்போது சாம்பியன் டிராபி இந்திய அணியில் நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டால், சாம்பியன்ஸ் டிராபிக்கு இந்திய அணியிலும் அவர் தேர்வு செய்யப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது அவர் யூகித்தப்படியே விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்திய ஒருநாள் அணியில் இணைந்த வருண் சக்கரவர்த்தி
தற்போது மூன்று போட்டிகள் கொண்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி உடன் வருண் சக்கரவர்த்தி திடீரென சென்று இணைந்திருக்கிறார். எனவே வருண் சக்கரவர்த்தி சாம்பியன் டிராபி தொடருக்கு முன்பாக இந்திய ஒருநாள் அணியில் அறிமுகம் ஆவார் என்றும், இங்கிருந்து அவரைச் சாம்பியன்ஸ் டிராபிக் கம்பீர் கூட்டி செல்வார் எனவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க :
அதே சமயத்தில் வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது குறித்து பிசிசிஐ எந்தவித தகவலையும் இன்னும் வெளியிடவில்லை. மேலும் அவர் இந்த இந்திய அணியினருக்கான வலை பயிற்சி பந்துவீச்சாளராக சேர்த்துக் கொள்ளப்பட்டு இருக்கிறாரா? என்பது குறித்தும் தகவல்கள் வெளிவரவில்லை. பெரும்பாலும் வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அறிமுகமாவார் சாம்பியன்ஸ் டிராபி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.