8 வருஷம்.. 116 இன்னிங்ஸ்.. விராட் கோலிக்கு நடந்தது சரியா.. கம்பீர் தவறான முடிவெடுக்கிறாரா?

0
184
Virat

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பெங்களூர் மைதானத்தில் விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.தற்போது இந்த போட்டியில் பேட்டிங் வரிசையில் கம்பீர் எடுத்த முடிவுகள் சரியா? என்பது குறித்து விவாதங்கள் சென்று கொண்டிருக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வானம் மேகமூட்டமாக வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்த பொழுதும் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தினார். நியூசிலாந்து அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்க இந்திய அணியில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இடம் பெற்றார்கள். மேலும் கில் விளையாடாததால் சர்ப்ராஸ் கான் இடம் பெற்றார்.

- Advertisement -

8 வருடம் 116 இன்னிங்ஸ்

முதலில் பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு கண்டிஷன் மற்றும் ஆடுகளம் இரண்டும் பெரிய சவால் கொடுத்தது. பந்து ஸ்விங் ஆனதோடு ஆடுகளத்தில் நன்றாக சீம் ஆனது. இதனால் பேட்ஸ்மேன்கள் பந்தை கணிக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்கள். இந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா இரண்டு ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இந்த நிலையில் மூன்றாவது இடத்தில் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக விராட் கோலி கில் விளையாடாத காரணத்தால் களமிறங்கினார். 8 பந்துகளை தடுமாறி சந்தித்த அவர் 9வது பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தார். இதைத் தொடர்ந்து வந்த சர்ப்ராஸ் கானும் டக் அவுட் ஆனார்.

- Advertisement -

கம்பீர் தவறான முடிவெடுக்கிறாரா?

இந்த போட்டியில் டாப் ஆர்டரில் நிறைய விளையாடி அனுபவப்பட்ட கே எல் ராகுல் மூன்றாவது இடத்தில் வந்திருக்க வேண்டும் எனவும், விராட் கோலி வழக்கமான இடத்திலும், சர்பராஸ் கான் ஐந்து அல்லது ஆறாவது இடத்தில் அவருடைய வழக்கமான இடத்திலும் வந்திருக்க வேண்டும் எனவும் கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிங்க : ஏபிடி நீங்கதான் எனக்கு பெஸ்ட்.. நரைன் கிட்ட நீங்க பண்ண சம்பவத்தை மறக்க மாட்டேன்.. வாழ்த்துக்கள் – விராட் கோலி வாழ்த்து

மூன்றாவது இடத்தில் விளையாடுவதற்கு சரியான வீரர் இருந்த பொழுதும் கம்பீர் எடுத்த முடிவு சரியானது இல்லை என விமர்சனம் செய்யப்படுகிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் எட்டு ஆண்டுகள் மற்றும் 116 இன்னிக்கு கழித்து விராட் கோலி மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார். மேலும் மூன்றாவது இடத்தில் அவருடைய ஆவரேஜ் 16 என மிகவும் சுமாராகவே இருக்கிறது. இப்படி இருந்த பொழுதிலும் கம்பீர் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடாது என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது!

- Advertisement -