இந்த வருடம் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா வந்து முதல் போட்டியை வென்று சிறப்பான முறையில் ஆரம்பித்தது. இந்த நிலையில் ஜெய்ஸ்வால் போல் விளையாட விரும்பி தான் எப்படி ஏமாற்றம் அடைந்தேன் என்பது குறித்து இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் கூறியிருக்கிறார்.
இந்த முறை இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து அணி முதல் டெஸ்ட் போட்டியை அபாரமான முறையில் வென்றது. இதற்கு மிக முக்கிய காரணமாக இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் இருந்தார். அவர் இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடி 196 ரன்கள் எடுத்தது வெற்றிக்கு மிகவும் முக்கியமான காரணமாக அமைந்தது.
அதே சமயத்தில் இங்கிலாந்து அணி அடுத்த நாள் டெஸ்ட் போட்டிகளிலும் சில இடங்களில் நல்ல வலிமையான இடத்தில் இருந்தாலும் கூட போட்டியை தொடர்ந்து தவறவிட்டு தோற்றது. எனவே இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நான்குக்கு ஒன்று என அசத்தலாக கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் உடன் இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 700க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து அசத்தினார்.
இதுகுறித்து இங்கிலாந்து டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் கூறும் பொழுது “முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு நிறைய பாசிட்டிவான விஷயங்கள் இருப்பதாக நாங்கள் நம்பினோம். ஆனால் இந்தியாவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவது எப்பொழுதும் கடினம் என்பதை நாங்கள் உணர்ந்து இருந்தோம். நான் முதல் டெஸ்ட் போட்டியில் 196 ரன்கள் எடுத்ததும் சரி ஒரு பெரிய டெஸ்ட் தொடர் எனக்காக இருக்கிறது என்று நினைத்தேன்.
அதாவது நான் ஜெய்ஸ்வாலை போல ஒரு பெரிய டெஸ்ட் தொடரை பெறப் போகிறேன் என்று நினைத்தேன். ஆனால் முதல் டெஸ்ட் போட்டி முடிவடைந்ததும், நான் எனக்கு முன்னால் இருந்த கண்டிஷனுக்கு தகுந்தது போல் என்னை மாற்றிக் கொள்ளவில்லை. நிச்சயம் இது பெரிய விரக்தியாக இருந்தது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நல்ல ஃபார்மில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 10 இன்னிங்ஸ்கள் ஃபார்மில் இல்லாமல் விளையாடுவது போல்தான் அமைந்தது. நான் ஓரிரு முறை நன்றாக உணர்ந்தேன். ஆனால் எங்காவது ஒரு 80 அல்லது 50 ரன்கள் எடுத்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும். ஆனால் நானே என்னை முன்னோக்கித் தள்ளிக் கொள்ளாமல் விட்டது ஏமாற்றம்.
இதையும் படிங்க : நாங்க இந்திய அணிக்கு எதிரா நம்பிய வீரரே வேற ஆள்.. இந்த மாற்றம் முக்கியமானது – அசலங்கா மகிழ்ச்சி
கேப்டனாக ஸ்டோக்ஸ் எல்லோரது கருத்தையும் கேட்பதில் வல்லவர். நான் துணை கேப்டனாக என்னுடைய கேப்டனுக்கு சவால் விட விரும்புகிறேன். அவரும் எனக்கு அதையே செய்ய விரும்புகிறார். துணை கேப்டனாக என்னுடைய வேலை கேப்டனுக்கு தலைவலி கொடுப்பது கிடையாது. கேப்டனுடைய வேலையை எளிதாக்குவது மட்டும்தான்” என்று கூறி இருக்கிறார்.