இந்திய அணிக்கு எதிராக 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் கிரிக்கெட் தொடரை சரித் அசலங்கா தலைமையில் இலங்கை அணி கைப்பற்றி இருக்கிறது. இந்த நிலையில் இந்தத் தொடரில் வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் நிறைய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய அணிக்கு எதிராக நடந்து முடிந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என கைப்பற்றியது. இதற்கு முன்பாக 1997 ஆம் ஆண்டு இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொடரில் இலங்கை அணியை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய டாப் ஆர்டர் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக இருந்தார்கள். அதே சமயத்தில் அவர்களுடைய சுழல் பந்துவீச்சாளர்கள் எதிர்பாராத அளவுக்கு மிகச் சிறப்பாக விக்கெட்டுகளை கொத்துக்கொத்தாக அள்ளினார்கள். இந்த இரண்டு விஷயங்களும் சிறப்பு வாய்ந்த வெற்றியை இலங்கை அணி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
இது குறித்து இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா கூறும்பொழுது “27 ஆண்டுகளுக்குப் பிறகுஇந்திய அணிக்கு எதிராக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்வது மிகவும் பாசிட்டிவான ஒன்று. இதற்கு அடுத்து பாசிடிவ் ஆன ஒரு விஷயம் என்னவென்றால் எங்கள் அணியில் இருந்த சுழல் பந்துவீச்சாளர்கள். நாங்கள் எங்களுடைய முதன்மை சுழல் வனிந்து ஹசரங்காவை மிகவும் நம்பி இருந்தோம். அவர் இல்லாத நிலையில் வாண்டர்சே மற்றும் வெல்லாலகே இருவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டார்கள்.
பயிற்சியாளர்கள் மற்றும் நான் உட்பட எங்கள் அணியின் பேட்ஸ்மேன் களுக்கு ஒரு சவாலை வழங்கினோம். இந்த தொடரை எடுத்துக் கொண்டால் எங்களுடைய மிடில் ஆர்டர் கொஞ்சம் சுமாராகவே விளையாடியிருந்தது. ஆனால் எங்களுடைய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார்கள். இதன் காரணமாகவே எங்களால் இலக்குகளை எளிதாக அடைய முடிந்தது.
இதையும் படிங்க : சூரியகுமார் சர்பராஸ் கானுக்காக செய்த காரியம்.. இந்திய கிரிக்கெட்டில் என் லட்சியம் இதுதான்
டாப் ஆர்டர் அளித்த தொடக்கம்தான் நான் பெரிய மாற்றமாக பார்க்கிறேன். இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்கும் பொழுது, எங்களுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. நான் பேட்டிங் செய்ய ஐந்தாவது இடத்தில் வருகிறேன். அப்போது பத்து ஓவர் மார்க்கில் ஒரு நல்ல அடித்தளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதான் நாங்கள் பேட்டிங்கில் முதிர்ச்சி அடைந்ததற்கான அடையாளம்” என்று கூறி இருக்கிறார்.