விராட் ரோஹித் இல்லனாலும் இந்தியாவ எதுவும் பண்ண முடியாது.. நான் நேரடியா அத பாத்தேன் – பென் ஸ்டோக்ஸ் பேட்டி

0
823
Stokes

இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஓய்வு பெற்ற இருந்தாலும் மீதமிருக்கும் இந்திய அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறியிருக்கிறார்.

இந்திய அணி அடுத்த மாதம் ஜூலை இருபதாம் தேதி முதல் இங்கிலாந்து சென்று இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட நீண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. நான்காவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இரண்டு அணிகளுக்குமே இது முதல் தொடராக அமைவதால் முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது.

- Advertisement -

இந்தியா நம்ப முடியாதது

இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், தங்கள் நாட்டிற்கு வர இருக்கும் இந்திய டெஸ்ட் அணியை தங்களால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது எனவும், அதற்கான காரணம் குறித்தும், பென் ஸ்டோக்ஸ் பேசி இருக்கிறார்.

இது குறித்து பென் ஸ்டோக்ஸ் கூறும் பொழுது ” நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்பொழுதும் எதிரணியை முழுமையாக புரிந்து கொள்ள எதிர்கொள்ள முயற்சி செய்கிறோம். அதற்கு ஏற்ற வகையில் எப்படி மாற்றி அமைத்துக் கொள்வது என்று பார்க்கிறோம். அவர்களுக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என இரண்டு பெரிய வீரர்கள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். ஆனால் இருந்த போதிலும் இந்திய அணி நம்ப முடியாத அளவுக்கு சிறந்தது”

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பார்த்திருக்கிறேன்

“நான் ஐபிஎல் தொடரில் நேரத்தை செலவிட்ட பொழுது, என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இந்தியாவில் பேட்ஸ்மேன்கள் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதாவது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால், அவர்களின் சிறந்த இரண்டு பேட்டர்கள் இல்லாத பொழுதும் அவர்களை நீங்கள் லேசாக எடுத்துக் கொள்ள முடியாது”

இதையும் படிங்க : இந்தியா வரப்போறாங்க.. ப்ளீஸ் என் வீரர்கள் வாயை விடாதிங்க.. இத மட்டும் செய்யுங்க – மெக்கலம் கோரிக்கை

“உலகில் எங்கு சென்று விளையாடினாலும் இந்திய அணி சிறந்த அணி. நாங்கள் இப்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரை மட்டுமே கருத்தில் கொள்வோம். இதற்குப் பிறகு உடனடியாக இந்திய அணி தொடரை பற்றி நாங்கள் பார்க்க ஆரம்பித்து விடுவோம். அது எங்களுக்கு ஒரு நீண்ட கடினமான கோடை காலமாக இருக்கப் போகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -