இந்தியா வரப்போறாங்க.. ப்ளீஸ் என் வீரர்கள் வாயை விடாதிங்க.. இத மட்டும் செய்யுங்க – மெக்கலம் கோரிக்கை

0
897
Brendon

இந்திய அணி இங்கிலாந்துக்கு டெஸ்ட் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் நிலையில், இங்கிலாந்து வீரர்கள் களத்திற்கு வெளியேயும் சிறப்பான முறையில் பணிவாக இருக்க வேண்டும் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் முடிவடைந்ததும் அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் இந்திய அணி இங்கிலாந்து சென்று இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கு முன்பாக அங்கு செல்லும் இந்திய ஏ அணி இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக இரண்டு பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பென் டக்கெட் சர்ச்சை பேச்சு

இந்தியாவிற்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இங்கிலாந்து அணி வந்த பொழுது, அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் இங்கிலாந்து அணி அதிரடியாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதை பார்த்துதான் இந்தியாவின் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுகிறார் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதற்கு அடுத்து சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இந்தியாவிற்கு வெள்ளை பந்து தொடர்கள் விளையாட இங்கிலாந்து அணி வந்த பொழுது, தாங்கள் இந்தத் தொடர்களில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்தாலும் கூட, சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் அவர்களை வென்றால் போதும் என்று கூறி மேலும் சர்ச்சையை கிளப்பினார். இது இந்தியா தாண்டி இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களாலும் விரும்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

பிரண்டன் மெக்கலம் வேண்டுகோள்

இதுகுறித்து பிரண்டன் மெக்கலம் கூறும்பொழுது “கிரிக்கெட் மைதானத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது மட்டுமே முக்கியமானது கிடையாது. நீங்கள் பொதுவாக உங்களை எப்படி நடத்திக் கொள்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. மேலும் பொதுமக்களுடன் நீங்கள் எப்படி இணைந்து இருக்கிறீர்கள் என்பது முக்கியம். எனவே கொஞ்சம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களிடமிருந்து விலகி இருக்க வேண்டாம்”

இதையும் படிங்க : 35 பந்து சம்பவம்.. எனக்கு 500 மிஸ்டு கால் இருந்தது.. எனக்கு பிடிக்காதது நடந்தது – சூரியவன்சி பேட்டி

“ஆரம்பத்தில் நாங்கள் விளையாடிய கிரிக்கெட்டை பார்த்து மக்கள் உற்சாகமாக இருந்தார்கள். நாங்கள் விளையாடிய சுதந்திரமான கிரிக்கெட்டை பார்த்து வியந்தார்கள் என்று நினைக்கிறேன். நாங்கள் இப்படியான அணிதான் என்ற உணர்வு அவர்களுக்கு இருந்ததாக உணர்ந்தேன். ஆனால் நாங்கள் அதை நழுவ விட்டு விட்டோம். மேலும் நாங்கள் ஊடகங்களிடம் பேசும் பொழுதும் புத்திசாலித்தனமாக இல்லை. எனவே நாங்கள் பணிவாக இருந்து மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -