இந்திய கிரிக்கெட்

இனி அது இந்திய டீமுக்கு இல்ல.. மெசேஜ் பண்ணி எங்க ஆள் 2 பேர் கிட்ட சொல்லிட்டேன் – பென் ஸ்டோக்ஸ் தகவல்

தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணியின் முக்கிய நோக்கம் மாறி இருப்பதாக, அந்த அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முக்கியமான விஷயம் ஒன்றை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக, ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இன்று இங்கிலாந்து அணி பென் ஸ்டோக்ஸ் தலைமையில் விளையாடுகிறது.

நான் மெசேஜ் பண்ணி விட்டேன்

தற்போது ஐசிசி தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இதற்கு அடுத்து தென் ஆப்பிரிக்கா இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அடுத்த மூன்று இடத்தில் இருக்கின்றன. புதிதாக வெளியிடப்பட்ட டெஸ்ட் அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அணி அதிரடியாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் பேசும் பொழுது “ஐசிசி டெஸ்ட் அணிகள் தரவரிசை வெளியிடப்பட்ட பொழுது நான் மெக்கலம் மற்றும் ராப் கீக்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன். அதில் நாம் தரவரிசையில் இன்னும் ஒரு இடம் முன்னேற வேண்டும் என்று சொன்னேன். ஒரு அணியாக எங்களுக்கு விஷயங்கள் நன்றாக நடக்கும் பொழுது எங்களை தடுத்து நிறுத்துவது கடினம் என்பது அனைவருக்கும் தெரியும். அது எப்போதும் அப்படி நடக்காது என்பதும் எங்களுக்கு தெரியும்”

- Advertisement -

இனி ஆதிக்கம் மட்டும்தான்

“இந்த இரக்கமற்றவர் என்ற வார்த்தைக்கு நான் எப்பொழுதும் பெரிய ரசிகன் கிடையாது. நான் விரும்பும் வார்த்தையும் நான் அணிக்குள் புகுத்த நினைக்கும் வார்த்தையும் ‘ஆதிக்கம்’ மற்றும் ‘ஆதிக்கம் செலுத்து’ என்பதைத்தான். விளையாட்டில் எந்த சூழ்நிலையை எதிர்கொண்டாலும், இந்த வார்த்தைகளைத்தான் எங்கள் மனதில் நிறுத்திக் கொள்ள விரும்புகிறேன்”

இதையும் படிங்க : சச்சின் விராட் கிடையாது.. சாய் சுதர்ஷன் தான் கவாஸ்கருக்கு அடுத்து இதுல பெஸ்ட் பேட்ஸ்மேன் – சித்து பேட்டி

“தற்போது எங்களிடம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு போட்டி இருக்கிறது. தற்போதைக்கு எங்களுடைய கவனம் அதில் மட்டுமே இருக்கும். எங்களுக்கு இதில் என்ன நடக்கப்போகிறது என்பது நன்றாக தெரியும். இருந்தபோதிலும் நாங்கள் ஜிம்பாப்வே சவாலை சமாளிப்போம். பின்னர் இந்தியா தொடர் தொடங்குவதற்கு அருகில் வரும் பொழுது, எங்கள் கவனத்தை அதில் திருப்புவோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by
Tags: Ben Stokes

Recent Posts