150 ரன் ஈஸி இல்ல.. கம்பீர் இத பண்ணா மட்டும்தான் இந்திய அணி ஜெயிக்க முடியும் – பாகிஸ்தான் பசித் அலி பேட்டி

0
223
Basit Ali and Gambhir

ஏற்கனவே நியூசிலாந்து டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றியடைந்து வைட் வாஷை தவிர்க்க போராடி வருகிறது. நட்சத்திர பவுலர் பும்ரா உடல் நலக்குறைவால் அணியில் இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி கடைசி கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், இந்திய அணி வெற்றி பெற முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு ஒரு சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

- Advertisement -

மும்பை வான்கடே மைதான சிக்கல்

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து 235 ரன்களில் ஆல் அவுட் ஆகிய நிலையில், இந்திய அணி 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது. 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய நியூஸிலாந்து அணி, ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்துள்ளது. இதன் மூலம் 143 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்த மூன்றாவது போட்டி பிரபல மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இங்கு, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களை சேஸ் செய்வது மிகவும் கடினமாகவே இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக, தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணிக்கு எதிராக 2000 ஆம் ஆண்டு 163 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றதே, இதுவரை அதிகபட்சமாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு எளிதாக இருக்காது

இது குறித்து பேசி உள்ள பசித் அலி “தற்போது முன்னிலை 143 ரன்கள். நியூசிலாந்து 150க்கு மேல் இலக்கை நிர்ணயிக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். ஆனால் இந்திய அணிக்கு இந்த டார்கெட் எளிதாக இருக்காது. கடைசி இரண்டு டெஸ்டிலும், கௌதம் இடது-வலது பேட்ஸ்மேன்கள் காம்பினேஷனில் சென்றார். ஆனால், இப்போது தான் அதைச் செய்ய வேண்டிய சரியான நேரம் வந்துவிட்டது.”

இதையும் படிங்க: ஆஸ்திரேலியா பாகிஸ்தான் ODI.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. போட்டி தொடங்கும் நேரம்.. முழு விவரம்

“ஜெய்ஸ்வால், ரோஹித் ஆகியோர் ஓபனிங் வருகின்றனர். கில் மூன்று இடத்திலும், கோலி 4 இடத்துக்கும் வர வேண்டும் என்பது எந்தவித கட்டாயமில்லை. சேஸிங்கில் கம்பீர் லெஃப்ட்-ரைட் கூட்டணியுடன் செல்கிறாரா இல்லையா என்பதை நான் பொறுத்திருந்து பார்க்கப் போகிறேன். முதல் இன்னிங்சில் கில், பந்த், சுந்தர் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். கில் துரதிர்ஷ்டவசமாக சதம் அடிக்க முடியாமல் போனது. இந்தத் தொடரில் இரண்டு சதங்கள் மட்டுமே உள்ளன”. என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -