இந்தியா மாதிரி ஆடினால் தலையில்தான் அடிபடும்.. தோல்விக்கு காரணம் எங்க ஆள் இவர்தான் – டஸ்கின் அகமத் ஓபன் பேட்டி

0
4866
Taskin

நேற்று இந்திய அணிக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி படுதோல்வி அடைந்தது குறித்து அந்த அணியின் வீரர் டஸ்கின் அகமத் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசி இருக்கிறார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக பாகிஸ்தானில் வென்று வந்த பங்களாதேஷ் அணிக்கு இந்தியாவில் விளையாடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. அவர்கள் எதிர்பார்த்ததை விட மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நிதீஷ் குமார் ரெட்டியை தவறவிட்ட பங்களாதேஷ்

நேற்று நிதீஷ் குமார் ரெட்டி பேட்டிங்கில் ஆரம்பத்தில் ஐந்து ரன்கள் எடுத்தது பொழுது விக்கெட் கீப்பர் லிட்டன் தாஸ் ஒரு எளிமையான கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார். இதற்கு அடுத்து அதிரடியாக 27 பந்தில் அரை சதம் அடித்து, மொத்தமாக 34 பந்தில் 74 ரன்கள் குவித்து நிதீஷ் குமார் மிரட்டிவிட்டார்.

இது குறித்து பேசி இருக்கும் டஸ்கின் அகமத் கூறும் பொழுது “கேட்ச்சை தவற விடுவது எப்பொழுதும் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும். எப்போதும் இந்தியா போல ஒரு மிகச் சிறப்பான அணியில் இருக்கும் வீரருக்கு நாம் இப்படி தவறு விடுவது பெரிய பின் விளைவுகளை உண்டாக்கி விடும். எனவே இதுதான் நேற்றைய போட்டியில் நாங்கள் தோற்றுதற்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா போல விளையாடினால் தலையில் அடிபடும்

மேலும் பேசிய டஸ்கின் அகமது கூறும் பொழுது “இந்திய அணி பொதுவாக 180 முதல் 200 ரன்கள் எடுக்கிறார்கள். ஆனால் எங்கள் நாட்டில் நாங்கள் விளையாடும் ஆடுகளம் 140 ரன்கள் அடிக்கும் ஆடுகளமாகவே இருக்கிறது. நாங்கள் பெரிய ஸ்கோர் அடித்து பழக்கம் இல்லை. வரும் நாட்களில் எங்கள் நாட்டில் ஆடுகளங்கள் மாறும் பொழுது நாங்களும் சிறப்பாக விளையாடுவோம். அப்பொழுது நாங்கள் பெரிய ரன்களை அடிப்போம் மேலும் ரன்களை பாதுகாப்போம்”

“அதே சமயத்தில் நாங்கள் உலகெங்கும் நடக்கும் டி20 லீக்குகளின் கலந்து கொள்ள முடிந்தால் அது எங்களுக்கு பெரிய அனுபவமாக அமையும். மேலும் எங்களுடைய உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு வலிமையாக இருக்கும் பொழுது எங்களுடைய தேசிய அணியும் சிறப்பாக உருவாகும்”

இதையும் படிங்க : நான் உள்ள போனதும் நிதிஷ் குமார் என்கிட்ட இதை சொன்னார்.. வெளிய 2 பேர் சப்போர்ட் பண்றாங்க – ரிங்கு சிங் பேட்டி

“சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் இந்திய வீரர்கள் சரளமாக அதிரடியில் ஈடுபடுவார்கள். அவர்கள் குனிந்து படுத்து கொண்டு விளையாடும் ஷாட் எல்லாம் ஆரம்பத்தில் இருந்து விளையாடி பழகி இருக்கிறார்கள். நாங்கள் அப்படியான ஷாட் விளையாடினால் எங்களுக்கு பழக்கம் இல்லாததால் தலையில்தான் அடிபடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -