50 ஓவரில் 498 ரன்கள் குவித்து இங்கிலாந்து உலக சாதனை ; நெதர்லாந்து அணியை துவம்சம் செய்த பட்லர் & லிவிங்ஸ்டன்

0
514

இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது. முதல் போட்டி தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பந்து வீச்சை ஏன் தேர்வு செய்தோம் என்கிற அளவிற்கு இங்கிலாந்து நெதர்லாந்து அணியை புரட்டி எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ஜேசன் ராய் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்பொழுது இங்கிலாந்து அணி ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தது. அதன் பின்னர் சால்ட், மலான், பட்லர் மற்றும் இறுதியில் வந்த லியம் லிவிங்ஸ்டன் இணைந்து நெதர்லாந்து அணியின் பந்து வீச்சாளர்களுக்கு பயத்தை காட்டினார்கள்.

- Advertisement -

சால்ட் 93 பந்துகளில் 122 ரன்கள், டேவிட் மலான் 109 பந்துகளில் 125 ரன்கள், ஜோஸ் பட்லர் 70 பந்துகளில் 162* ரன்கள் மற்றும் லியம் லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 66*ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே போட்டியில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்த இங்கிலாந்து அணி வீரர்கள் :

- Advertisement -

நெதர்லாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்து உள்ளனர். முதலில் டேவிட் மலான் இன்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலம் மூன்று வகை கிரிக்கெட் பார்மெட்டிலும் ஜோஸ் பட்லருக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து வீரர்கள் மத்தியில் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார்.

மூன்று சர்வதேச பார்மெட்டிலும் சதம் அடித்த இங்கிலாந்து வீரர்கள்

ஜோஸ் பட்லர்
ஹீதர் நைட்
டேவிட் மாலன்*

65 பந்துகளில் 150 ரன்களை எட்டிய ஜோஸ் பட்டிலர் ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் 2-வது அதிவேக 150 ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். முதலிடத்தில் ஏபி டிவிலியர்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது (64 பந்துகளில் 150 ரன்கள்).

ஒருநாள் போட்டிகளில் அதிவேக 150:

ஏபி டிவில்லியர்ஸ் – 64 பந்துகள்
ஜோஸ் பட்லர் – 65 பந்துகள்*

அதேபோன்று மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மத்தியில் ஒரு நாள் போட்டிகளில் அதிகமாக 150 ரன்கள் அடித்த வீரர்களாக ஏபி டிவிலியர்ஸ் மற்றும் விவியன் ரிச்சர்ட்ஸ் ஆகியோர் இருந்தனர். இன்று அவர்களது சாதனையையும் ஏபி டி வில்லியர்ஸ் சமன் செய்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிக 150 அடித்த மிடில் ஆர்டர் வீரர்கள் :

ஏபி டிவில்லியர்ஸ் – 2
விவியன் ரிச்சர்ட்ஸ் – 2
ஜோஸ் பட்லர் – 2*

லியம் லிவிங்ஸ்டன் 17 பந்துகளில் அரை சதம் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 2-வது அதிவேக அரை சதம் அடித்த வீரர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார்.முதலிடத்தில் ஏபி டிவிலியர்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது (16 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார்).

ஒருநாள் போட்டியில் அதிவேக அரைசதம்:

ஏபி டிவில்லியர்ஸ் – 16 பந்துகள்
லியாம் லிவிங்ஸ்டோன் – 17 பந்துகள்*

இங்கிலாந்து அணி வீரர்கள் மட்டுமின்றி இங்கிலாந்து அணியும் இன்று பிரமாண்ட சாதனை படைத்துள்ளது. ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில்
அதிகபட்ச அணி ஸ்கோராக 482 ரன்கள் இருந்தது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 482 ரன்கள் குவித்திருந்தது. இன்று இங்கிலாந்து சாதனையை இங்கிலாந்து அணியே உடைத்து புதிய சாதனையை படைத்துள்ளது.

ஒருநாள் போட்டிகளை பொருத்தவரையில் அதிகபட்ச அணி ஸ்கோர்கள் :

இங்கிலாந்து – 498/4 ( நெதர்லாந்துக்கு எதிராக)
இங்கிலாந்து – 481/6 (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக)
இங்கிலாந்து – 444/3(பாகிஸ்தானுக்கு எதிராக)

- Advertisement -