“இங்கிலாந்து அணியை வீழ்த்த.. புது ரெண்டு பசங்களாலதான் முடியும்.. காரணம் இதான்” – ஆகாஷ் சோப்ரா அதிரடி

0
337
Akash

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக் கொள்ளும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இந்த போட்டி நடக்கும் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டின மைதான ஆடுகளம், முதல் போட்டி நடந்த ஹைதராபாத் ஆடுகளத்தை போலவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் முதல் டெஸ்ட் போட்டி தோல்விக்கு மிக முக்கிய காரணம், இந்திய அணியின் பேட்டிங் யூனிட் சுழல் பந்துவீச்சை சரியாக எதிர்கொண்டு விளையாடாததுதான் என்பது மிகவும் கவலை அளிக்கும் செய்தியாக இருக்கிறது.

- Advertisement -

சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை அமைத்துக் கொண்டு, சுழற் பந்துவீச்சை சரியாக விளையாட முடியாமல் இருப்பது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு பெரிய தலைவலியை உருவாக்கி இருக்கிறது.

இதன் காரணமாக தற்பொழுது இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு எப்படியான ஆடுகளும் அமைக்கப்பட வேண்டும் என்பதில் கூட உறுதியான முடிவுகள் எடுப்பதில் இந்திய அணி நிர்வாகம் தடுமாறி வருகிறது.

இதற்கு தீர்வாக ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ஐந்து பந்துவீச்சாளர்களுடன் செல்லும் தியரி இங்கு வேலை செய்யாது. அதே சமயத்தில் இங்கு முகமது சிராஜை வெளியில் வைத்து, அவருடைய இடத்தில் முழுமையான பேட்ஸ்மேன் சர்பராஸ் கான் இல்லை வாஷிங்டன் சுந்தர் என்பது போலத்தான் முடிவு செய்யப்பட வேண்டும். அப்படி செய்தால் இந்திய அணி 5 பந்துவீச்சாளர்களுக்காக வாஷிங்டன் சுந்தரை தேர்வு செய்யவே வாய்ப்புகள் அதிகரிக்கும்.

- Advertisement -

ஆனால் ரஜத் பட்டிதார் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் இந்திய அணிக்கு நிறைய மதிப்பை கொண்டு வருகிறார்கள். இவர்கள் சுழற் பந்துவீச்சிக்கு சாதகமான ஆடுகளங்களில் ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடி நிறைய ரன்கள் குவித்து வந்திருக்கிறார்கள்.

இவர்கள் நேராக சர்வதேச வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருந்து வரவில்லை. இது இந்தியாவிற்கு மிகவும் நல்ல செய்தியாக இருக்கிறது. இந்தியாவின் தற்காப்பை இது மிகவும் பலப்படுத்தும். இவர்களால் சுழற் பந்துவீச்சை அழுத்தத்திற்கு உள்ளாக்க முடியும்.

இதையும் படிங்க: இங்கிலாந்து முக்கிய வீரர் விலகல்.. வெறுப்பாக இருக்கிறது என்று ஸ்டோக்ஸ் புலம்பல்.. பரபரப்பு தகவல்கள்

எனவேஇருவரும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சர்பராஸ் கான் ஆறாவது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். ஏழாவது இடத்தை கேஎஸ்.பரத்துக்கு கொடுக்க வேண்டும். இது சரியான ஒன்றாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.