தற்போது இலங்கை அணி சொந்த நாட்டில் இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. தற்போது இந்தத் தொடருக்கான 14 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்திருக்கிறது.
இங்கிலாந்து அணி அதிரடியான டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையின் காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டை சுவாரசியப்படுத்தினாலும் கூட பெரிய வெற்றிகளை பெற முடியவில்லை. இதன் காரணமாக அந்த அணி நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் பின்னடைவில் இருக்கிறது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக சமீபத்தில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உள்நாட்டில் விளையாடியது. இந்த முறையும் அதிரடியாக விளையாடினாலும் கூட ஜோ ரூட் தன்னுடைய அணுகுமுறையை மாற்றி தேவைக்கு தகுந்தபடி விளையாடினார். இது இங்கிலாந்து முன்னாள் வீரர்களை பெரிய அளவில் மகிழ்ச்சி படுத்தி இருந்தது.
மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உள்நாட்டில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என இங்கிலாந்து அணி கைப்பற்றியது. இந்த நிலையில்தான் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் உள்நாட்டில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி விளையாட இருக்கிறது.
இந்தத் தொடரில் காயம் அடைந்திருக்கும் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் ஜாக் கிரவுலி தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பெற்று இருந்த வேகப்பந்துவீச்சாளர் டில்லியன் பென்னிங்டன் தற்போது நடைபெற்று வரும் நூறு பந்து போட்டியில் காயமடைந்து இந்த தொடரில் இடம் பெறவில்லை. இவருடைய இடத்திற்கு ஒல்லி ஸ்டோன் தேர்வாகி இருக்கிறார்.
ஜாக் கிரௌலி இடத்திற்கு டான் லாரன்ஸ் விளையாடுவார். மேலும் ஜோர்டான் காக்ஸ் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார். இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 14 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை கீழே பார்க்கலாம்.
இதையும் படிங்க : விராட் பும்ரா ரோகித் இருக்கட்டுமே.. ஆனா அவங்க 2 பேர் இல்லனா இந்தியா அரைகுறை டீம்தான் – பாக் பசித் அலி கருத்து
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி:
பென் ஸ்டோக்ஸ் (சி), கஸ் அட்கின்சன், சோயிப் பஷீர், ஹாரி புரூக், ஜோர்டான் காக்ஸ், பென் டக்கெட், டான் லாரன்ஸ், ஒல்லி போப், மேத்யூ பாட்ஸ், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்






