தற்போது இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடி வருகிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட இரண்டு வீரர்கள் இல்லை என்றால் இந்திய அணி முழுமை அடையாது என பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறி இருக்கிறார்.
இந்திய அணி அடுத்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறது. போதிய அளவுக்கு சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராக இந்திய அணிக்கு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் போட்டிகள் இல்லை.
மேலும் புதிய பயிற்சியாளர் கம்பீர் தன்னுடைய திட்டப்படி நிறைய மாற்று ஏற்பாடுகளை இலங்கைத் தொடரில் இருந்து ஆரம்பித்து செய்து வருகிறார். இதில் ஒரு பகுதியாக ரவீந்திர ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுத்து அக்சர் படேலை முயற்சி செய்து வருகிறார்.
அதே சமயத்தில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களால் தனக்கு ஓய்வு வேண்டும் என கேட்டு வாங்கி டி20 தொடரில் விளையாடிவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி இந்திய அணி யார் இல்லாவிட்டால் முழுமை அடையாது என்பது குறித்து பேசி இருக்கிறார்.
இது குறித்து பசித் அலி கூறும் பொழுது “பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன் டிராபியில் இந்திய அணிக்கு ஆல் ரவுண்டர்கள் தேவை. ஹர்திக் பாண்டியா இல்லாமல் இந்திய அணி முழுமை அடையாது.தற்போது அவர்களுக்கு சரியான ஆல் ரவுண்டர்கள் தேவை. இப்போது ஹர்திக் பாண்டியா உடல் தகுதியை எப்படி பராமரிக்கிறார்? என்பது குறித்து பார்க்க வேண்டும். மேலும் அவர் வரவிருக்கும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும்.
இரண்டாவதாக ரவீந்திர ஜடேஜா இல்லாமலும் இந்திய அணி முழுமை அடையாது. அவரால் பீல்டிங், பேட்டிங் மற்றும் பவுலிங் என மூன்றிலும் சிறப்பான பங்களிப்பை கொடுக்க முடியும். அவரைப் போன்ற ஒருவர் இந்திய அணிக்கு கட்டாயம் தேவை. அக்சர் படேல் தட்டையான ஆடுகளத்தில் சரிப்பட்டு வர மாட்டார்.
இதையும் படிங்க : சச்சினின் மெகா ரெக்கார்டு.. மாற்றி வைத்த ரோஹித் சர்மா புதிய சாதனை.. 2வது போட்டியில் ODI அதிரடி
இலங்கைப் போல பாகிஸ்தானில் பந்து அதிகமாக சுழலாது. இங்கு ஆடுகளம் தட்டையானது. கடாபி மைதானத்தில் நீங்கள் பெரிய ஷாட்கள் விளையாடலாம். அங்கு நீங்கள் பவுண்டர்களை அடித்து விளையாட முடியும். மேலும் நீங்கள் சந்திக்கும் முதல் பந்தில் இருந்து அதிரடியாக விளையாட முடியும்” என்று கூறி இருக்கிறார்.






