நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 499 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு போட்டியை வெல்வதற்கு மிக அருகில் இருக்கிறது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது.
வில்லியம்சன் – கிளன் பிலிப்ஸ்
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு முன்னாள் கேப்டன் கேப்டன் வில்லியம்சன் 93 ரன்கள் மற்றும் இறுதி கட்டத்தில் கிளன் பிலிப்ஸ் 58 ரன்கள் எடுத்தார்கள். அந்த அனைத்து 91 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 348 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் மற்றும் பிரைடல் கார்ஸ் இருவரும் தலா நான்கு விக்கெட் கைப்பற்றினார்கள்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாக் கிரவுலி மற்றும் நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் இருவரும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தார்கள். இங்கிலாந்து அணி 71 ரன்னுக்கு நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
ஹாரி புரூக் 2 அதிரடி பார்ட்னர்ஷிப்
இதைத் தொடர்ந்து ஹாரி புரூக் ஒல்லி போப் உடன் இணைந்து 188 பந்துகளில் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஒல்லி போப் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் ஸ்டோக்ஸ் உடன் இணைந்து 198 பந்துகளில் 159 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதில் ஸ்டோக்ஸ் 146 பந்தில் 80 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
மிகச் சிறப்பாக விளையாடிய ஹாரி புரூக் 197 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உடன் 171 ரன்கள் அதிரடியாக குவித்தார். இங்கிலாந்து அணி 103 ஓவர்களில் 499 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சில் மேட் ஹென்றி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: 2வது டெஸ்ட்.. ஆஸி நட்சத்திர வீரர் திடீர் விலகல்.. காரணம் என்ன.. யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? – வெளியான தகவல்கள்
இதைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி தற்போது மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 49 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து நான்கு ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்று இருக்கிறது. இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் மூன்று விக்கெட் கைப்பற்றினார். கைவசம் மாந்து விக்கெட் மட்டுமே இருப்பதால் இங்கிலாந்து அணிக்கு நியூசிலாந்து அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியாது. எனவே இந்த போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கு அதிகபட்ச வாய்ப்புகள் இருக்கிறது!