இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் முக்கிய நட்சத்திர வீரர் ஒருவர் காயத்தின் காரணமாக விலகி இருப்பது அந்த அணிக்கு பெரிய பின்னடைவை உருவாக்கி இருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற இருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியில் மிக முக்கிய துருப்புச் சீட்டாக ஆஸ்திரேலிய அணிக்கு இருப்பார் என்று கருதப்பட்ட வீரர் காயத்தால் விலகி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணியின் சாதனை
ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து உள்நாட்டில் விளையாடி வரும் பகல் இரவு டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தோற்றது கிடையாது. இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய பொழுது வெறும் 36 ரன்னுக்கு அடிலெய்ட் மைதானத்தில் ஆட்டம் இழந்து இருந்தது.
இந்த போட்டியில் ஆஸ்திரேலியா தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் எட்டு ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இந்திய அணியின் முக்கியமான ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்த நிலையில் தற்போது அவர் காயம் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு இது முக்கியமான பின்னடைவாக தற்பொழுது அமைந்திருக்கிறது.
வாய்ப்புள்ள இரண்டு வீரர்கள்
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா ஏ அணியில் ஸ்காட் போலந்து இடம் பெற்று இருந்தார். தற்போது மாற்று வீரருக்கான இடத்தில் இவருக்கு அதிக அளவு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய அணிக்கு எதிரான இரண்டு நாட்கள் கொண்ட பகல் இரவு பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலிய பிரதமர் லெவன் அணியிலும் இடம் பிடித்திருக்கிறார்.
இதையும் படிங்க : தயவு செஞ்சு அவரை நீக்குங்க.. பும்ரா அணியை ஜெயிக்க இத செஞ்சாதான் சாத்தியம் – ஆஸி ஜான்சன் பேட்டி
மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் சீன் அப்போட் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியா டெஸ்ட் அணியின் கதவுகளை தட்டிக் கொண்டிருக்கிறார். எனவே இவருக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இருந்தபோதிலும் தற்பொழுது ஆஸ்திரேலியா ஏ அணியில் தொடர்ந்து வாய்ப்பு பெறும் ஸ்காட் போலந்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.