71-4 டு 319-5.. ஹரி புரூக் அட்டகாச பேட்டிங்.. முன்னிலையில் இங்கிலாந்து.. நியூசிக்கு சொந்த மண்ணில் பின்னடைவு

0
249
Brook

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங்கில் திருப்பி பதிலடி கொடுத்திருக்கிறது. ஹாரி புரூக் சதம் அடித்து தனது அணியை காப்பாற்றி இருக்கிறார்.

இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட தற்பொழுது நியூசிலாந்தில் முகாமிட்டிருக்கிறது. இந்த மூன்று போட்டிகளையும் நியூசிலாந்து வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலை இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நியூசிலாந்து முதல் இன்னிங்ஸ் கலக்கல்

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லாதம் 54 பந்துகளில் 47 ரன்கள், ரச்சின் ரவீந்தரா 49 பந்துகளில் 34 ரன்கள், கிளன் பிலிப்ஸ் 87 பந்துகளில் 58 ரன்கள் எடுத்தார்கள்.

ஒருமுனையில் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் நிலைத்து நின்று சிறப்பாக விளையாடி 197 பந்துகளில் 93 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணி 91 ஓவர்களில் 348 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் பிரைடன் கார்ஸ் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியை மீட்ட ஹாரி புரூக்

இதைத் தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிரௌலி 0, பென் டக்கெட் 46, ஜேக்கப் பெத்தேல் 10, ஜோ ரூட் 0 என சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். இதனால் இங்கிலாந்து அணி 71 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த நேரத்தில் ஹாரி புரூக் மற்றும் துணை கேப்டன் ஒல்லி போப் இருவரும் ஜோடி சேர்ந்தார்கள்.

இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடி அதிரடியாக 188 பந்தில் 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. ஒல்லி போப் 98 பந்தில் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதற்கு அடுத்து ஹாரி புரூக் மற்றும் கேப்டன் ஸ்டோக்ஸ் ஜோடி 130 பந்தில் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறது.

இதையும் படிங்க : ஐபிஎல் ஏலத்துல 5 ஆஸி வீரர்களை வாங்கிட்டேனு விமர்சனம் பண்ணாதிங்க.. காரணம் இதுதான் – பஞ்சாப் கோச் ரிக்கி பாண்டிங் பேச்சு

சிறப்பாக விளையாடிய ஹாரி புரூக் ஆட்டம் இழக்காமல் சதம் அடித்து 163 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 132 ரன்கள், கேப்டன் டோக்ஸ் 76 பந்தில் 37 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 74 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்திருக்கிறது. தற்போது நியூசிலாந்து அணியை விட வெறும் 29 ரன் மட்டுமே பின்தங்கி இருக்கிறது. எனவே இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை விட இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது.

- Advertisement -