ஐபிஎல் ஏலத்துல 5 ஆஸி வீரர்களை வாங்கிட்டேனு விமர்சனம் பண்ணாதிங்க.. காரணம் இதுதான் – பஞ்சாப் கோச் ரிக்கி பாண்டிங் பேச்சு

0
410
Ricky

நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 8 வெளிநாட்டு வீரர்களில் 5 ஆஸ்திரேலிய வீரர்களை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தான் வாங்கியது விமர்சனங்களை உருவாக்கலாம் என அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறியிருக்கிறார்.

இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருந்து வந்த ரிக்கி பாண்டிங் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்புக்கு வந்த முதல் வருடமே ஐபிஎல் மெகா ஏலமாக அமைந்ததால் அணியை உருவாக்க வேண்டிய சூழல் இருந்தது.

- Advertisement -

எட்டில் ஐந்து வீரர்கள்

இந்த நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ரிக்கி பாண்டிங் மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேக்ஸ்வெல், ஜோஸ் இங்லீஷ், ஆரோன் ஹார்டி, சேவியர் பார்ட்லெட் என மொத்தம் ஐந்து ஆஸ்திரேலியா வீரர்களை வாங்கினார். ஒரு அணிக்கு மொத்தமாக எட்டு வெளிநாட்டு வீரர்களை வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து என நிறைய திறமையான வீரர்கள் இருந்த பொழுதும் ரிக்கி பாண்டிங் அவர்கள் மீது செல்லவில்லை. மேலும் இந்திய அளவில் எடுத்துக் கொண்டால் இஷான் கிஷான் தேவை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு இருந்தது அவருக்கும் ரிக்கி பாண்டிங் ஏலத்தில் செல்லவில்லை. தற்போது அதிக ஆஸ்திரேலியா வீரர்களை வாங்கியதால் விமர்சனம் வரலாம் என்று அவரே கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதற்காக விமர்சனங்கள் வரலாம்

இதுகுறித்து ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது “நாங்கள் சில சிறந்த இளம் இந்திய திறமைகளை எங்களுடைய குழுவுக்குள் கொண்டு வந்திருக்கிறோம். இது எங்களுக்கு மிகவும் உற்சாகமானதாக இருக்கிறது. எங்களுடைய ஸ்கவுட் சிறந்த இளம் வீரர்களை தேடி கண்டறிந்து இருக்கிறது. ஏலத்தில் நாங்கள் சிறப்பாக செல்வதற்கு அவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்”

“எங்கள் அணியில் சில ஆஸ்திரேலியா வீரர்களை வாங்கியதற்காக நான் விமர்சனம் செய்யப்படலாம். எங்களின் எட்டு வெளிநாட்டு வீரர்களில் ஐந்து ஆஸ்திரேலியா வீரர்கள் வாங்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் எங்களுக்கு தேவையான இடங்களை பார்க்கும் பொழுது வாங்கிய எல்லா ஆஸ்திரேலிய வீரர்களும் அதற்கு சரியானவர்கள் என்பதால் வாங்கப்பட்டார்கள்”

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் ஹீரோ.. பிரத்விஷா ஜீரோவாக காரணமே இந்த ஒரு விஷயம்தான் – சிறு வயது கோச் பேட்டி

“ஸ்டோனிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் பஞ்சாப் அணிக்கு திரும்புவது நல்ல விஷயம். அவர்கள் ஏற்கனவே இந்த அணியில் விளையாடியிருக்கிறார்கள். ஆரோன் ஹார்டி, ஜோஸ் இங்லீஷ் மற்றும் சேவியர் பார்ட்லெட் மூவரும் இங்கு வருவது எங்களுக்கு பலமாக அமைந்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -