5 ஓவரில் நியூசிலாந்து ஆறுதல் வெற்றி.. 10 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறிய பரிதாபம்

0
71
NZ

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று சி பிரிவில் நியூசிலாந்து மற்றும் உகாண்டா அணிகள் மோதிக்கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை இரண்டாவது பேட்டிங் செய்த நியூசிலாந்து வெறும் 5.2 ஓவரில் முடித்து ஆறுதல் வெற்றியை பெற்றது.

இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அனுபவம் குறைவான உகாண்டா பேட்ஸ்மேன்களால் அனுபவம் மிக்க நியூசிலாந்து பந்துவீச்சு படையின் முன்னாள் நிலைக்க முடியவில்லை.

- Advertisement -

உகாண்டா அணியின் 10 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்தார்கள். அந்த அணியில் வைஸ்வா மட்டும் தாக்குப் பிடித்து விளையாடி 18 பந்துகளுக்கு 11 ரன்கள் எடுத்தார். உகாண்டா அணி 18.4 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 40 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது.

நியூசிலாந்து பந்துவீச்சில் டிம் சவுதி 3 விக்கெட் கைப்பற்றினார். மேலும் போல்ட், சான்ட்னர், சச்சின் ரவீந்தரா என மூன்று நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி வெறும் 5.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கான்வே 15 ரன்களில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆப்பிரிக்க கண்டத்தில் ஜிம்பாப்வே அணியைத் தகுதிச் சுற்றில் வீழ்த்தி உகாண்டா அணி தகுதி பெற்றது. ஆனால் தொடர்ந்து மிகவும் குறைந்த ரன்களுக்கு சுருண்டு வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : 2 பந்து 2 ரன்.. தென் ஆப்ரிக்காவிடம் வரலாற்று வெற்றியை தவறவிட்ட நேபாள்.. 1 ரன்னில் சோகம்

மேலும் நியூசிலாந்து அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் வெற்றியாகவே அமைந்திருக்கிறது. நியூசிலாந்து அணி இடம் பெற்று இருக்கும் பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. நியூசிலாந்து அணி இந்த முறை டி20 உலகக்கோப்பையின் முதல் சுற்றுறோடு வெளியேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.