மார்க் வுட் ரூல்ட் அவுட்.. ஆனால் மகிழ முடியாத இலங்கை.. 6.7 அடி 20 வயது பையனால் பிரச்சனை

0
46
Wood

தற்போது இங்கிலாந்து அணிக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் இந்த தொடரில் எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் மார்க் வுட் காயம் காரணமாக ரூல்டு அவுட் ஆகி இருக்கிறார்.

இந்த தொடரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் போட்டி துவங்கி நடைபெற்று நேற்று முடிவடைந்தது. இந்த போட்டியில் சிறப்பான முறையில் இலங்கை அணி போராடி இருந்தாலும் கூட இங்கிலாந்து அணியிடம் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து தொடரில் பின்தங்கி இருக்கிறது.

- Advertisement -

ஆசஸ் தொடரில் வந்த ஞானம்

கடந்த ஆண்டு இங்கிலாந்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற ஆசஸ் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துவீச்சு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதன் காரணமாக இங்கிலாந்தில் விளையாடும் பொழுது வேகம் மட்டுமே இனி கை கொடுக்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் உணர்ந்தது.

இதன் அடிப்படையில் அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட் இங்கிலாந்து டெஸ்ட் அணியில் ஒரு முக்கிய வேகப்பந்துவீச்சாளராக மாறி இருக்கிறார். தனது அதிவேகத்தின் மூலமாக பேட்ஸ்மேன் நிலைத்து நின்று இருந்தாலும் கூட எதிர்பாராத வகையில் வீழ்த்தி திருப்புமுனையை உருவாக்குகிறார். இவர் தொடரில் இருந்து விலகி இருப்பது நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவுதான்.

- Advertisement -

6.7 அடி 20 வயது வீரர்

அதே சமயத்தில் இவருடைய இடத்திற்கு லெய்செஸ்டர்ஷைர் அணிக்காக விளையாடும் 6.7 அடி உயரமுள்ள 20 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் ஹல் இடம்பெற்றிருக்கிறார். இந்த அணி கடந்த ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் கவுண்டி தொடரை வெல்வதற்கு இவருடைய பந்து வீச்சு முக்கிய காரணமாக இருந்தது.

இதையும் படிங்க : 2024 துலீப் டிராபி.. கேப்டன் ருதுராஜ் அணியின்.. வலிமையான உத்தேச பிளேயிங் XI.. 3 தமிழக வீரர்கள்

மேலும் தற்போது இங்கிலாந்து வந்திருக்கும் இலங்கை அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான ஒரு பயிற்சி போட்டியில் விளையாடியது. அந்த போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதற்கு மிக முக்கிய காரணமாக ஜோஸ் ஹல் பந்துவீச்சு இருந்தது. இவர் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட் கைப்பற்றி இலங்கை அணியை சாதாரணமாக சுருட்ட காரணமாக இருந்தார். மார்க் வுட் இடத்திற்கு இவர் வருவது இலங்கை அணியால் மகிழ முடியாத ஒரு விஷயமாக அமைந்திருக்கிறது!

- Advertisement -