நாடு நமக்கு என்ன கொடுக்கல.. வெளிநாட்டு பாஸ்போர்ட் இருக்குனு இந்த மாதிரி செய்யாதீங்க – பாக் கோச் மீது பாசித் அலி வருத்தம்

0
20

பாகிஸ்தான் அணி தற்போது வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்தப் போட்டி அதிகபட்சமாக டிராவை நோக்கிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் அசார் மகமது பாகிஸ்தான் அணியை அவமதித்ததாகவும், உங்களிடம் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருக்கலாம் ஆனால் அதற்காக இப்படி செய்யக்கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் பாசித் அலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது தனது சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் விளையாடிய பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளர் செய்த நிலையில் அதற்குப் பிறகு விளையாடிய வங்கதேச அணி பாகிஸ்தான் அணியை விட சிறப்பாக விளையாடிய அதிகபட்ச ரன்கள் குவித்தது.

565 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆகி இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் பாகிஸ்தான் அணி தற்போது வரை நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்துள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர் செய்த சந்திப்பில் கலந்து கொண்ட பாகிஸ்தான் அணியின் உதவி பயிற்சியாளர் அசார் மஹ்மூத் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொப்பியை பின்னோக்கி அணிந்து தொப்பியில் பொறிக்கப்பட்டுள்ள நட்சத்திரத்தை மதிக்காததை கண்டு வருத்தம் அடைந்ததாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு பாகிஸ்தானியாக இருக்கும் எனக்கு அணியின் உதவி பயிற்சியாளர் அசார் மஹ்மூத்தின் செயல் எனக்கு பிடிக்கவில்லை. நீங்கள் பாகிஸ்தான் அணிக்கு சேவை செய்திருக்கிறீர்கள். ஒரு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இதுபோன்று செயலில் ஈடுபட்டிருந்தால் நான் எதுவும் பேசி இருக்க மாட்டேன். நீங்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தான் அணியின் தொப்பியை பின்னோக்கி அணிந்து உள்ளீர்கள்.

தயவுசெய்து இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்களை செய்யாதீர்கள். பாகிஸ்தான் அணியின் நட்சத்திரம் உங்களுக்கு பிடிக்கவில்லையா? நாடு நமக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. உங்களிடம் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் இருந்தாலும் இது போன்ற அவமதிக்கும் செயல்களை செய்யாதீர்கள்” என்று தனது வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படிங்க:நீங்க செஞ்ச இந்த விஷயம்.. ஒவ்வொரு ரசிகனின் இதயத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் – தவானுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து

பத்திரியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அசார் மஹ்மூத் தனது பாகிஸ்தான் அணியின் தொப்பியை பின்னோக்கி அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு செய்தது அணியை அவமதிக்கும் செயலில் நடந்து கொண்டதாக பாசித் அலி கருதுகிறார்.

- Advertisement -