25 பந்தில் ருத்ர தாண்டவம்.. ஷாருக்கான் அதிரடியை வீணாக்கிய சாய் சுதர்சன்.. அஸ்வினின் திண்டுக்கல் கோவை அணியை வென்றது

0
3152
Tnpl2024

இன்று டிஎன்பிஎல் தொடரின் 19 ஆவது போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் அஸ்வின் தலைமை தாங்கும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் தங்கள் அணிந்து வீசும் என அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்தால் லைக்கா கோவை கிங்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் சுஜய் 9 பந்தில் 8 ரன்கள், சுரேஷ்குமார் 6 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து முகிலேஷ் 4 பந்தில் 5 ரன் எடுத்து வெளியேறினார்.

- Advertisement -

மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் மிகவும் பொறுமையாக விளையாடி 39 பந்தில் 33 ரன்கள் மட்டுமே எடுத்தார். இவருடன் விளையாடிய ராம் அரவிந்த் 26 பந்தில் 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் லைக்கா கோவை கிங்ஸ் அணியின் ரன் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. மேலும் இந்த சீசன் முழுவதிலும் இதுவரையில் சாய் சுதர்சன் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை.

இந்த நிலையில் பொறுப்பை கடைசி கட்டத்தில் கையில் எடுத்த கேப்டன் ஷாருக் கான் வெறும் 25 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 51 ரன்கள் எடுத்தார். இவருக்கு சிறப்பாக ஒத்துழைப்பு தந்த ஆதிக் உர் ரஹ்மான் 12 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். 20 லைக்கா கோவை கிங்ஸ் அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தரப்பில் வருண் சக்கரவர்த்தி இரண்டு மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் விமல் குமார் 12 பந்தில் 13 ரன்கள், சிவம் சிங் 33 பந்தில் 36 ரன்கள் எடுத்தார்கள். அடுத்து வந்த பூபதி குமார் இரண்டு பந்துகள் சந்தித்து ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். இதனால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு நெருக்கடி உருவானது.

இந்த நிலையில் ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் மற்றும் சி.சரத்குமார் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை மீட்டதொடு அதிரடியாகவும் விளையாடினார்கள். இதில் சி. Lசரத்குமார் 15 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே எடுக்க, இந்திரஜித் ஆட்டம் இழக்காமல் தனி ஆளாக 49 பந்துகளில் 11 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களுடன் 96 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதையும் படிங்க : மகளிர் ஆசிய கோப்பை.. 201 ரன்.. ஹர்மன்பிரீத் ரிச்சா கோஷ் சூறாவளி பேட்டிங்.. இந்தியா யுஏஇ அணியை எளிதில் வீழ்த்தியது

இறுதியாக திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பத்தொன்பது புள்ளி இரண்டு ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கோவை லைகா கிங்ஸ் நட்சத்திர வீரர் சாய் சுதர்சன் மெதுவாக பேட்டிங் செய்தது, கேப்டன் ஷாருக் கான் சீக்கிரத்தில் பேட்டிங் செய்ய வருவதை தடுத்ததோடு, அவர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்ததையும் எடுத்ததையும் வீணடித்து விட்டது. இந்த தொடரில் லைக்கா கோவை கிங்ஸ் அணியின் முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -