இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப்க்கு தனி ரசிகர்கள் உலகம் முழுவதும் இருந்தனர். ஆல் ரவுண்டராக இருந்த ஃபிளின்டாஃப் களத்தில் செயல்படும் விதம் காரணமாக அவர் விளையாடிய காலத்தில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக இருந்தார்.
ஐபிஎல் 2009 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஃபிளின்டாஃப் ஒப்பந்தமாகி இருந்தார். உலகின் முன்னணி ஆல் ரவுண்டராக ஃபிளின்டாஃப் இருந்த நேரத்தில் அவருக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டதால் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
அண்டர்டேக்கர் உடன் மோதல்:
ஃபிளின்டாஃப் புகழை பயன்படுத்தி அவரை பல தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதில் மிகவும் முக்கியமானவை WWE மல்யுத்த போட்டியில் அண்டர்டேக்கர் உடன் மோத ஒரு வாய்ப்பு இருந்ததுதான்.இது குறித்து பேசிய ஃபிளின்டாஃப், கிரிக்கெட்டில் இருந்து நான் ஓய்வு பெற்ற பின்பு என்ன செய்வது என்று தெரியவில்லை.
எனக்கு பல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு வந்து கொண்டிருக்கிறது. அப்போதுதான் நான் கை ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் ஒரு ஐடியாவை கூறினேன். WWE போட்டிகள் இங்கிலாந்தில் நடக்கும் போது நான் அண்டர்டேக்கர் உடன் மோதினால் எப்படி இருக்கும் என்று சொன்னேன். அந்த ஐடியாவை அவர்கள் wwe நிறுவனத்திடம் கூறினார்கள்.
பயிற்சியின் போது காயம்:
அது அந்த நிறுவனத்தை நடத்திய வின்ஸ் மிக்மேனுக்கு பிடித்தது. உடனே அவர்கள் என்னை அமெரிக்காவுக்கு அழைத்தார்கள். WWE பயிற்சி மையத்தில் என்னை மூன்று மாதம் தங்க வைத்து பயிற்சி செய்ய சொன்னார்கள். அந்த பயிற்சியில் நான் சரியாக செயல்பட்ட பிறகு எனக்கு மூன்று ஆண்டுகள் ஒப்பந்தம் தருவதாகவும் அதில் மேன்செஸ்டர் நடக்கும் WWE போட்டியின் போது பிரபல டபிள்யூ டபிள்யூ வீரர் அண்டர்டேக்கர் உடன் மோத ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.
இதையும் படிங்க: கில் எனக்கு போட்டியா?.. அடக்கடவுளே அப்படி எல்லாம் கிடையவே கிடையாது – ஹாரி புரூக் திட்டவட்டம்
ஆனால் இதற்கான பயிற்சியின் போது தான் காயம் அடைந்ததாகவும் அதற்கு மேல் தம்மால் தாக்குப் பிடிக்க முடியவில்லை என்றும் ஃபிளின்டாஃப் கூறினார். தமக்கு ஏற்பட்ட காயம் காரணமாக wwe போட்டியில் இருந்து விலகத்தான் முடிவெடுத்ததாகவும் ஃபிளின்டாஃப் கூறினார். ஆனால் WWE நிறுவனம் என்னை பெரும் பணம் கொடுத்து விளையாட வற்புறுத்தியதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். தமது குழந்தைகள் கிரிக்கெட் மீது தான் ஆர்வமாக இருந்ததாகவும் அமெரிக்காவுக்கு வர அவர்கள் விருப்பம் இல்லை என்று கூறியதால் தமது WWE அறிமுகம் நடக்காமல் போய்விட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.






