இந்த வெஸ்ட் இண்டீஸ் டீம்கிட்ட எங்களால ரிலாக்ஸா இருக்கவே முடியல.. நாங்க இத செஞ்சா மட்டும் தப்பிக்கலாம் – திலக் வர்மா பேச்சு

0
0

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணியின் வைஸ் கேப்டன் திலக் வர்மா, எதிரணியின் அதிரடி பேட்டிங் திறனை வியந்து பாராட்டிப் பேசியுள்ளார்.

​ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டி20 சீரிஸில் இந்திய அணி 2-1 என முன்னிலையில் இருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் இந்திய பவுலர்களுக்கு கடும் சவாலை அளித்து வருகின்றனர். 250 ரன்கள் கொண்ட பெரிய டார்கெட்டை வெற்றிகரமாக சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, அடுத்த மேட்ச்சில் 223 ரன்களை சேஸ் செய்யும்போது 14 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வி அடைந்தது.

- Advertisement -

​ஐதராபாத்தில் நடைபெறவுள்ள நான்காவது டி20 மேட்ச்சிற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் திலக் வர்மா பேசும்போது “நாங்கள் இதைப் பற்றி நிறைய விவாதித்து இருக்கிறோம். வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் சிறந்த ஒரு டீம். அவர்களின் பிளேயர்கள் நிறைய ஃபிரான்ச்சைசி கிரிக்கெட் விளையாடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு டி20 கிரிக்கெட் எப்படி விளையாட வேண்டும் என்று நன்றாகத் தெரியும். அவர்களிடம் இருக்கும் பவர் நம்ப முடியாத ஒன்றாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து அந்த சந்திப்பில் திலக் வர்மா பேசும்போது “நீங்கள் அவர்களின் ஓப்பனர்கள் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டர்களை அவுட் செய்துவிட்டால் ரிலாக்ஸ் ஆகிவிடலாம் என்று நினைக்க முடியாது. 10 பேரில் 10 பேருமே வந்து அடிப்பார்கள். சொல்லப்போனால் அவர்களின் 11ஆவது நம்பர் பிளேயர் கூட வந்து சிக்ஸர் அடிப்பார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் அவர் பேசும்போது “அவர்கள் அனைவரும் அவுட் ஆகும் வரை மேட்ச் முடியாததால், நாங்கள் எங்கள் பிளான்களை சரியாக எக்ஸிகியூட் செய்வதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -