இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்திய அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மூன்றிலும் தோல்வி அடைந்து அடுத்ததாக சாம்பியன் டிராபி தொடரில் விளையாட உள்ளது.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் கெவின் பீட்டர்சன் மற்றும் ரவி சாஸ்திரி கூறிய கருத்துக்கள் தவறானது என சில முக்கிய விஷயங்களை கூறியிருக்கிறார்.
முன்னாள் வீரர்களின் எதிர்மறை விமர்சனங்கள்
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த இங்கிலாந்து அணி முதலில் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரை நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமாக இழந்தது. அதற்குப் பிறகு ஒரு நாள் தொடரிலாவது வெற்றி பெற முயற்சிக்கும் என அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்து இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் ஒரு நாள் தொடரையும் இழந்துள்ளது. இதில் குறிப்பாக எந்த ஒரு போட்டியிலும் தங்களது போராட்ட குணத்தை இங்கிலாந்து அணி வீரர்கள் காட்டவே இல்லை.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் மற்றும் இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சில காட்டமான விமர்சனங்களை தெரிவித்திருந்தனர். கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து வீரர்கள் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவதில் கவனம் செலுத்துவதை விட கோல்ப் விளையாடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் எனவும், ரவி சாஸ்திரி ஆங்கில வீரர்கள் போதுமான அளவு பயிற்சி பெறாவிட்டால் பலவீனங்களை சமாளிக்க முடியாது எனவும் கருத்துக்களை கூறிய நிலையில் இதற்கு இங்கிலாந்து பயிற்சியாளர் மறுத்துப் பேசி இருக்கிறார்.
இதில் உண்மை இல்லை
இதுகுறித்து மெக்கல்லம் கூறும் பொழுது “அவர்கள் கூறும் கருத்துக்களில் உண்மை இல்லை. நாங்கள் தொடருக்காக நிறைய பயிற்சி எடுத்துள்ளோம். முகாமில் காயங்கள் ஏற்பட்டதால் எங்கள் அணி சரியான நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக வீரர்களை கொஞ்சம் பின்வாங்க வைத்துள்ளோம். மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்காக பாகிஸ்தானிலும் எங்களுக்கு மூன்று பயிற்சி அமர்வுகள் உள்ளன.
இதையும் படிங்க:ரோஹித் இதை ஓபனா பேசி.. ரொம்ப மரியாதை மிக்கவரா மாறிட்டார்.. இந்த கலாச்சாரம் நமக்கு வேண்டாம் – அஸ்வின் கருத்து
வீரர்கள் நிறைய கிரிக்கெட் விளையாடி தான் வந்திருக்கிறார்கள். குறிப்பாக காயங்கள் இருக்கும்போது அவர்களை புத்துணர்ச்சியோடு வைத்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே எங்கள் மீது வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்கள் முற்றிலும் தவறானது” எனக் கூறியிருக்கிறார். குறிப்பாக முதல் ஒருநாள் போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அதற்குப் பிறகு நடைபெற்ற இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






