சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள 8வது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பல பரீட்சை நடத்துகின்றன.
இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் இந்திய அணி துபாயில் விளையாடுவது குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடர்
இந்தியா கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தானில் விளையாட மறுத்ததை அடுத்து இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மாற்றப்பட்டு இந்திய அணி அங்கு விளையாடி வருகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் ஒரே மைதானத்தில் விளையாடி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது.
பாகிஸ்தானில் விளையாடக்கூடிய மற்ற அணிகள் வெவ்வேறு மைதானங்களில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணி மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடுவது விமர்சனங்களை உருவாக்கியிருக்கிறது. இது குறித்து ஏற்கனவே சிலர் கருத்து தெரிவித்திருக்கும் நிலையில், இங்கிலாந்து அணியின் ஜாஸ் பட்லர் இந்திய அணி அங்கு விளையாடுவது குறித்து தான் அதிகமாக சிந்திப்பதில்லை எனவும் நாங்கள் விளையாடும் போட்டிகள் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை எங்களது நோக்கம் என சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
அதைப் பற்றி கவலை இல்லை
இது குறித்து ஜாஸ் பட்லர் கூறும்போது “உண்மையை கூற வேண்டுமானால் நான் அது குறித்து சிந்திப்பதில்லை. இது ஒரு தனித்துவமான போட்டியாக உள்ளது. ஒரு அணி வேறு இடத்தில் விளையாடும் நிலையில், தொடரானது பாகிஸ்தானில் நடத்தப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி எல்லாம் தற்போது நான் அதிகம் கவலைப்படுவதில்லை. அடுத்த போட்டிக்காக நாங்கள் நன்றாக தயாராவதில் மட்டுமே முழுமையான கவனம் செலுத்தப் போகிறேன்” என்று ஜாஸ் பட்லர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:இன்னும் 6 நாள் இருக்கு.. அதனால ரோஹித் சர்மாகிட்ட நிச்சயம் இதை கேட்க போறேன் – அக்சார் பட்டேல் கலகலப்பு
நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகள் ஒரு பிரிவில் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், இங்கிலாந்து அணி ஏற்கனவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்திருக்கிறது. எனவே அரை இறுதி வாய்ப்பில் நீடிக்க இன்று நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. எனவே இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.






