இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்திய அணியிடம் ஏற்கனவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் திட்டம் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்தாலும் தனது தவறுகளை திருத்திக் கொண்டு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தற்போது டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கிறது. இரண்டாவது போட்டியில் குறிப்பாக இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சுலபமாக எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் சுமார் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இங்கிலாந்து அணியில் பிரதான வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் வடிவ கிரிக்கெட் திருப்பி இருக்கிறார். காயத்தால் அவர் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட நிலையில் தன்னை சிறப்பான முறையில் தயார்படுத்தி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆர்ச்சர் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி இருப்பதை உற்சாகமாக பேசி இருக்கும் ஸ்டோக்ஸ், சாதாரண பந்து வீச்சாளர்களைப் போலவே அவரும் பயன்படுத்தப்படுவார் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “எல்லாரைப் போலவே அவரது விஷயத்திலும் எடுக்கப்படும் முக்கியமான முடிவாக இது இருக்கும் என்று நான் பார்க்கிறேன். இந்திய அணியில் யாராவது ஒரு வீரர் ஆபத்தானவராக தெரிந்தால் ஆர்ச்சர்க்கு கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் கொடுக்கப்படலாம். இதனால் எந்தத் திட்டங்களோ அல்லது கட்டுப்பாடுகளோ கிடையாது. நிச்சயமாக அவரை நான்கு அல்லது ஐந்து ஓவர் ஸ்பெல் வீசுவதற்கு மட்டுமே பயன்படுத்த மாட்டோம்.
இதையும் படிங்க:சர்வதேச டெஸ்ட் தரவரிசை பட்டியல்.. சுப்மன் கில் முன்னேற்றம்.. ஹாரி புரூக் முதலிடம்.. மற்ற வீரர்கள் நிலை என்ன?
இது அன்றைய நாளில் போட்டி எப்படி செல்கிறது என்பது குறித்து தான் முடிவு எடுக்கப்படும். இந்த விஷயம் உண்மையிலேயே உற்சாகமாக இருக்கிறது. இது அவருக்கு மட்டும் இன்றி இங்கிலாந்து ரசிகர்களுக்கும் மிகவும் ஒரு உற்சாகமான விஷயமாகும். அந்த காலகட்டத்தில் அவர் காயத்தால் பாதிக்கப்பட்டாலும் தன்னை கையாண்ட விதம் மிகவும் பாராட்டுக்குரியது. அதற்குப் பிறகு அவர் தன்னை மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறக்கி நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடும் விதம் நன்றாக உள்ளது” என்று அவர் பேசி இருக்கிறார்.